Cricket

யுவராஜ் சிங் வாய்க்கு வந்தபடி பேசாதீங்க… ரெய்னா பதிலடி!!

ஓய்வு பெற்றபின்னர் அவ்வப்போது கிரிக்கெட் குறித்து பேட்டி கொடுத்துவந்த யுவராஜ்சிங், சமீபத்தில் மனம் திறந்து இடக்கை சுழற்பந்து வீச்சாளரான நான் விக்கெட்டும் வீழ்த்தியதால் வேறு வழியின்றி என்னை அணியில் வைத்திருந்தனர்  என்று தோனியை சாடி இருந்தார்.

யுவராஜ்சிங் கூறும்போது, “ தோனி கேப்டன்ஷிப்பில் சுரேஷ் ரெய்னாவுக்கு பெரிய அளவில் சப்போர்ட் இருந்தது, தோனியின் செல்லப்பிள்ளை என்று அழைக்கப்படும் ரெய்னாவுக்கு அவர் போதுமான அளவு சப்போர்ட் கொடுத்தார்.

யுவராஜ் சிங் வாய்க்கு வந்தபடி பேசாதீங்க… ரெய்னா பதிலடி!!

ஒவ்வொரு கேப்டனுக்கும் அணியில் செல்லப்பிள்ளை இருப்பது வழக்கமே ஆகும், அந்த வகையில் தோனியின் செல்லப்பிள்ளை ரெய்னா ஆவார்.

அந்த காலகட்டத்தில் யூசுப் பதான் எவ்வளவு சிறப்பாக ஆடினாலும், அவருக்கும் பெரிய அளவில் ஆதரவு கிடைக்கவில்லை.” என்று கூறி இருந்தார்.

யுவராஜ்சிங் கூறியதற்கு ரெய்னா பதிலடி கொடுக்கும்வகையில் பேசியுள்ளார். அதாவது, “தோனி எனக்கு இரண்டு வாய்ப்புகள் அளித்தால், நான் சிறப்பாக அந்த வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொண்டேன். அதாவது நான் அந்த 2 போட்டிகளிலும் கடுமையாகப் போராடி என் சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்தினேன்.

தோனி அனைவருக்கும் 2 போட்டிகளில் வாய்ப்பளிப்பார். அதில் திறமையை நிரூபிக்கும்பட்சத்தில் அணியில் இடம் கிடைக்கும். மிடில் ஆர்டரில் பல சவால்களுக்கு இடையே களம் இறங்க நான் எப்போதும் தயாராக இருந்தேன்” என்று கூறியுள்ளார்.

Related posts

எனக்கும் அவருக்கும் பல ஒற்றுமைகள்… சொல்கிறார் அடுத்த ராகுல் டிராவிட்!!

TamilSportsNews

நெருக்கடியில் நியூசிலாந்து… டஃப் கொடுக்கும் ஆஸ்திரேலியா!!

TamilSportsNews

இது நியாயம் இல்ல… நாங்க இன்னும் சிறப்பா விளையாடணும்… சொல்கிறார் மந்தனா!!

TamilSportsNews

Leave a Comment