Cricket

தோல்வியை பின் தள்ளி வெற்றி பெற்றீர்கள்.. இந்திய அணி வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்த சச்சின்!!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டியானது அடிலெய்டில் சமீபத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியின் 3 வது நாள் ஆட்டத்தில் இந்திய அணி தடுமாறிப் போனதுடன் 9 விக்கெட்டுகள் இழப்புடன் 36 ரன்கள் எடுத்து இருந்தது.

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் கடுப்பாகியதுடன் இந்திய அணி வீரர்கள்மீது கடுமையான விமர்சனங்களை முன் வைத்தனர்.

இந்தநிலையில் 2 வது டெஸ்ட் போட்டியில் பதிலடி கொடுக்க வேண்டும் என்ற நோக்கில்  விளையாடிய நிலையில், இந்திய அணி ஆஸ்திரேலியா அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

தோல்வியை பின் தள்ளி வெற்றி பெற்றீர்கள்.. இந்திய அணி வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்த சச்சின்!!

இந்த வெற்றி குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் ட்விட்டரில் பாராட்டுத் தெரிவித்துள்ளார்.

சச்சின் ட்விட்டரில், ‘‘ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்திய அணி வீரர்கள் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இந்த வெற்றியானது விராட் கோலி, ரோகித் சர்மா, இஷாந்த் சர்மா மற்றும் முகமது ஷமி இல்லாமல் கிடைத்த இந்த வெற்றியாகும்.

முதல் போட்டி தோல்வியை பின்தள்ளி மிகவும் உத்வேகத்துடன் செயல்பட்ட வீரர்கள் குறித்து மகிழ்ச்சி கொள்கிறேன், தோல்வியில் இருந்து மிகச் சிறப்பாக மீண்டது வெற்றிக்கு வித்திட்டது. இந்திய அணிக்கு என்னுடைய வாழ்த்துக்கள்’’ என்று பதிவிட்டுள்ளார்.

Related posts

டி.என்.பி.எல். கிரிக்கெட்: மதுரை பாந்தர்ஸை வீழ்த்தி திண்டுக்கல் டிராகன்ஸ் வெற்றி வாகை

TamilSportsNews

பிங்க் பந்து எல்லாம் மேட்டரே இல்ல.. ஷமியை புகழ்ந்த விருத்திமான் சஹா!!

TamilSportsNews

2022 ஆம் ஆண்டு முதல் அமெரிக்காவில் லீக் போட்டிகள் ஆரம்பம்!!

TamilSportsNews

Leave a Comment