Cricket

டோனியை பின் வரிசையில் இறக்கியது ஏன்? – ரவிசாஸ்திரி விளக்கம்

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி அளித்த ஒரு பேட்டியில் கூறியது,  “உலக கோப்பை கிரிக்கெட்டில் நியூசிலாந்துக்கு எதிராக அரைஇறுதி ஆட்டத்தில் ஆடியது.

டோனியை பின் வரிசையில் இறக்கியது ஏன்? - ரவிசாஸ்திரி விளக்கம்

     அந்த அரையிறுதி ஆட்டத்தில் டோனியை முன்னதாகவே ஆட்டத்தில் இறக்கியிருக்க வேண்டும் என்று எல்லோரும் சொல்கிறார்கள். டோனியை முன்கூட்டியே இறக்கி ஆட்டம் இழந்து இருந்தால் அத்துடன் இலக்கை விரட்டும் முயற்சி செத்து போயிருக்கும்.

     டோனி ஆட்டத்தை வெற்றிகரமாக முடிப்பதில் மிகவும் சிறப்பு மிக்கவர். அவரது அனுபவமான ஆட்டம் பின்வரிசையில் தேவை என்பதாலேயே 7 வது வரிசையில் டோனியை இறக்கினோம். இந்த வகையில் அவரை பயன்படுத்தாமல் இருந்திருந்தால் குற்றமாகி இருக்கும் என்று கூறினார்.

     பேட்டிங்கில் 4 வது வரிசையில் நிலையான ஒரு ஆட்டக்காரர் தேவையாக இருந்தார். அது எங்களுக்கு பிரச்சினையாகவும் இருந்தது. ஷிகர் தவான் ஆட்டத்தில் காயமடைந்து வெளியேறியதால் லோகேஷ் ராகுல் தொடக்க வரிசைக்கு வந்தார். அதன்பின் விஜய் சங்கரும் காயத்தால் விலகியதால் எங்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை. அரைஇறுதிக்கு முன்பாக ஒரு ஆட்டம் இருந்திருந்தால் மயங்க் அகர்வாலை தொடக்க ஆட்டக்காரராக கொண்டு வந்து லோகேஷ் ராகுலை நடுவில் அனுப்பி சோதித்து பார்த்து இருப்போம்” என்று ரவிசாஸ்திரி கூறினார்.

Related posts

வங்காளதேச கிரிக்கெட் வீரர் ஷகிப் அல் ஹசனுக்கு கொலை மிரட்டல்!!

TamilSportsNews

சச்சினை அவுட் ஆக்கியதால் கொலை மிரட்டல்கள் வந்தன… இங்கிலாந்து ஆல்ரவுண்டர் டிம் பிரெஸ்னன்!!

TamilSportsNews

சிங்கம் சிங்கிளாவே அசத்திடுச்சு… பட்டைய கெளப்பிய ஜெகதீசன்!!

TamilSportsNews

Leave a Comment