Tennis

உடலளவில் தளர்வுறும்போது நானே முன்வந்து ஓய்வினை அறிவிப்பேன்.. பெடரர் பேச்சு!!

ரோஜர் ஃபெடரர் உலக அளவில் டென்னிஸ் வரலாற்றில் மிகச் சிறந்த வீரராக இருந்துவருகிறார். 19 கிராண்ட் ஸ்லாம் தொடர்களை வென்று ஆண்கள் ஒற்றையர் டென்னிஸ் வீரர்களுள் மிகச் சிறந்த வீரராக அறியப்படுகிறார்.

கொரோனா லாக்டவுனுக்கு முன்னர் இவரது வலது முழங்காலில் காயம் ஏற்பட ஆபரேஷன் செய்து கொண்டார். அதன்பின்னர் இந்த ஆண்டு போட்டிகளில் பங்கேற்க முடியாது என்று கூறி இருந்தார்.

உடலளவில் தளர்வுறும்போது நானே முன்வந்து ஓய்வினை அறிவிப்பேன்.. பெடரர் பேச்சு!!

மேலும், 2021 ஆம் ஆண்டு மீண்டும் மைதானத்தில் விளையாடுவேன் என்றும் கூறினார். ஆனால் தற்போது அனைவருக்கும் அதிர்ச்சி அளிக்கும் விதமாக பெடரர் ஓய்வு காலத்தை நெருங்கி உள்ளதாக கூறியுள்ளார்.

பெடரர் கூறுகையில், “டென்னிஸ் வாழ்க்கையின் இறுதி கால கட்டத்தில் நான் உள்ளேன். இப்போதைய சூழலில் 2 ஆண்டுகளில் என்ன நடக்கும் என்பதை கணிக்க முடியாது. இப்போது நான் மிக்க மகிழ்ச்சியோடு விளையாடுகிறேன்.

ஆனால் என்னால் போட்டியில் பங்கேற்பது முடியாதபோது நானே முன்வந்து ஓய்வினை அறிவிப்பேன்.  வயதானாலும் டென்னீஸ் விளையாட முடியும், ஆனால் வெற்றியினை நோக்கி கடின பயிற்சியில் ஈடுபட முடியாது.

2021 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் விளையாடுவது குறித்து பயிற்சியில் ஈடுபட்டு வருகிறேன். டோக்கியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்ல வேண்டும் என்பதே இப்போதைய குறிக்கோள்” என்று கூறியுள்ளார்.

Related posts

சானியா மிர்சாவுக்கு கெடச்ச வாய்ப்பு… ரீ என்ட்ரி வேற லெவல்போல!!

TamilSportsNews

மேடையில் கண்ணீர்.. ஓய்வினை அறிவித்த வோஸ்னியாக்கி

TamilSportsNews

ரசிகர்கள் முன்னிலையில் விளையாடும் ஆட்டத்திற்கு எப்போதும் உயிர் இருக்கும்.. சானியா உருக்கம்!!

TamilSportsNews

Leave a Comment