Cricket

இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் ‘Black Lives Matter’ லோகோ கொண்ட டிசர்ட் அணிந்து விளையாடும் வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள்

வெஸ்ட்இண்டீஸ்- இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையே டெஸ்ட் போட்டி நடத்தப்பட உள்ளன. அதன்படி வெஸ்ட் இண்டீஸ் அணி ஜூன் 8 ஆம் தேதி இங்கிலாந்து சென்றது. மேலும் 9 ஆம் தேதி மான்செஸ்டரில் வீரர்கள் தனிமைப்படுத்தப்பட்டு அதன்பின்னர் பயிற்சிகளைத் துவக்கினர்.

ரசிகர்கள் யாருக்கும் அனுமதி வழங்காமல் இங்கிலாந்து-வெஸ்ட்இண்டீஸ் அணிகள் இடையிலான டெஸ்ட் போட்டி சவுதம்டனில் ஜூலை 8 ஆம் தேதி துவங்கி, ஜூலை 24 ஆம் தேதி வரை விளையாடுகிறது.

இங்கிலாந்து அணியினைப் பொறுத்தவரை பயிற்சி ஆட்டத்தில் பங்குபெறும் 30 வீரர்களின் பெயரை சமீபத்தில் இங்கிலாந்து அணி அறிவித்தது. 14 நாட்கள் வீரர்கள் தங்களைத் தனிமைப்படுத்திக் கொண்ட நிலையில் அவகாசம் ஜூன் 23 ஆம் தேதியோடு முடிவடைந்தது. இதனால் ஜூன் 24 ஆம் தேதி அவர்கள் பயிற்சியைத் துவக்கினர்.

இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் ‘Black Lives Matter’ லோகோ கொண்ட டிசர்ட் அணிந்து விளையாடும் வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள்

போட்டியின்போது வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் ‘Black Lives Matter’ என்று லோகா பொறிக்கப்பட்ட டிசர்ட்டினை அணிந்து விளையாட உள்ளனர். இதற்கு ஐசிசி ஒப்புதல் வழங்கியுள்ளது.

வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் ஜேசன் ஹோல்டர் கூறியதாவது, ‘‘கருப்பின மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட கொடுமைகள் குறித்து ஒற்றுமை மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்துவது எங்களது கடமை. ஐசிசியின் ஒப்புதலின்படி நாங்கள் ‘Black Lives Matter’ என்று பொறிக்கப்பட்ட டி-சர்ட்டினை அணிவோம்’’ என்று கூறியுள்ளார்.

Related posts

இந்திய கிரிக்கெட் அணியின் மேலாளருக்கு வந்த சோதனை

TamilSportsNews

ரோகித் சர்மாவை விளம்பர தூதராக நியமித்துள்ள கிரிக்கிங்டம் அகாடமி!!

TamilSportsNews

தோனி விளையாடத் தயாராக இருந்தால், அவரைத் தேர்வு செய்யவும்.. ஹர்பஜன் சிங் கருத்து!!

TamilSportsNews

Leave a Comment