Cricket

நாங்கள் மேம்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியமாகும்… அயர்லாந்து கேப்டன் பேட்டி!

இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி சவுதம்டனில் நேற்று முன்தினம் துவங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சினைத் தேர்வு செய்ய அயர்லாந்து பேட்டிங்க் செய்து 44.4 ஓவர்களில் 172 ரன்கள் எடுத்து அவுட் ஆனது.

அடுத்து இங்கிலாந்து அணி களமிறங்கி 27.5 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 174 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மேலும் சாம் பில்லிங்ஸ் 67 ரன்களுடனும், கேப்டன் இயான் மோர்கன் 36 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். டேவிட் வில்லி ஆட்டநாயகன் விருதினைப் பெற்றுள்ளார்.

நாங்கள் மேம்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியமாகும்... அயர்லாந்து கேப்டன் பேட்டி!

தொலைக்காட்சி சேனல் ஒன்றிற்கு அயர்லாந்து கேப்டன் ஆன்டி பால்பிர்னி பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், “ஆடுகளத்தின் தன்மையை நாங்கள் முன்கூட்டியே கணித்திருக்க வேண்டும், அது எங்களுக்குப் பின்னடைவினைக் கொடுத்தது. அடுத்து முதல் 5 ஓவர் கடும் சவாலாக இருந்ததால் கட்டுப்படுத்தப்பட்டோம்.

கடுமையான முறையில் பயிற்சிகள் மேற்கொண்டோம். ஆனால் போட்டியில் நாங்கள் அதனை செயல்படுத்த தவறி விட்டோம். இன்னும் எங்களை நாங்கள் மேம்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியமாகும்” என்று கூறியுள்ளார்.

Related posts

இந்தியாமீது பழி.. சாடிய பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு தலைவர்!!

TamilSportsNews

நான் மீண்டும் திரும்பணும்.. அதுக்காக என்னனாலும் செய்வேன்.. உமேஷ் யாதவ் பேட்டி!!

TamilSportsNews

தோனி தேர்வாளர்களிடம் மனம் திறக்க வேண்டும்… முன்னாள் வீரர் மதன் லால்!!

TamilSportsNews

Leave a Comment