Cricket

வி மிஸ் யூ சுரேஷ் ரெய்னா.. சிஎஸ்கே ரசிகர்களின் வைரல் பதிவு!

கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் ஐபிஎல் போட்டியானது செப்டம்பர் மாதம் 19 ஆம் தேதி துவங்கி நவம்பர் 10 ஆம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறுகிறது.

இன்று நடைபெறும் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் களம் கண்டன. இதுவரை சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியினைப் பொறுத்தவரையில்  அந்த அணியின் துணை கேப்டனான சுரேஷ் ரெய்னா 3 வது இடத்தில் களம் இறங்கி வெற்றிக்கு வித்திட்டு வந்துள்ளார்,

ஆனால் இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் பங்கேற்க முடியாமல் அவர் இந்தியா திரும்பியுள்ளார். இது சிஎஸ்கே ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியது.

வி மிஸ் யூ சுரேஷ் ரெய்னா.. சிஎஸ்கே ரசிகர்களின் வைரல் பதிவு!

நேற்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி மிகவும் சிறப்பான வெற்றியைப் பெற்றது, மேலும் போட்டிக்கு முன்னதாக சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணிக்கு சுரேஷ் ரெய்னா வாழ்த்து தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டு இருந்தார்.

அதாவது, “நான் இன்று மைதானத்தில் இல்லை என்பதை நம்பமுடியவில்லை. சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி பெற வாழ்துக்கள்” என்று பதிவிட்டு இருந்தார். போட்டி நேற்று முடிந்தபோதிலும் ரசிகர்கள் அந்தப் பதிவினை வைரலாக்கியதோடு வி மிஸ் யூ என்றும் கருத்துகளைத் தெரிவித்து வந்தனர்.

Related posts

அன்று இரவு நீண்ட நேரம் தூக்கம் வரவில்லை – பஞ்சாப் கேப்டன் லோகேஷ் ராகுல் பேட்டி

TamilSportsNews

கங்குலி மாட்டிக்கிட்டார்… நான் தப்பிச்சிட்டேன்… யுவராஜ் சிங் பேட்டி!!

TamilSportsNews

அணிக்கு வாழ்த்து…. முதல் முறையாக சிவப்பு நிறப்பந்து… கலக்கும் கங்குலி!!!!!

TamilSportsNews

Leave a Comment