Cricket

பெண்கள்குறித்த சர்ச்சைகள் எங்கள் காலத்தில் கிடையாது—- உண்மையைப் போட்டுடைத்த யுவராஜ்சிங்!!

இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் ரோகித் சர்மா மற்றும் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ்சிங் இருவரும் இன்ஸ்டாகிராமில் உரையாடிய போது, யுவராஜ்சிங்கிடம் தற்போதைய இந்திய அணிக்கும், தாங்கள் விளையாடிய காலத்தில் இருந்த இந்திய அணிக்கும் உள்ள வித்தியாசம் என்ன? என்று ரோகித் சர்மா கேட்க, அதற்கு யுவராஜ்சிங்,“நாம் அணிக்குள் வந்த போது சீனியர் வீரர்கள் மிகவும் ஒழுக்கமாக நடந்து கொண்டனர். தற்போது இருக்கும் அளவு சமூக ஊடகங்கள் அப்போது இருக்கவில்லை.

அதனால் மற்றவர்களின் எண்ணங்களை ஆராய்வதை விடுத்து, நமக்கு நாமே சிறப்பாக இருக்க நினைத்தோம். சீனியர் வீரர்களின் செயல், நடத்தை போன்றவை இளம் வீரர்களுக்கு முன் மாதிரியாக இருந்தது.

பெண்கள்குறித்த சர்ச்சைகள் எங்கள் காலத்தில் கிடையாது---- உண்மையைப் போட்டுடைத்த யுவராஜ்சிங்!!

மைதானத்திற்கு வெளியே இருக்கும் முறை, உள்ளே இருக்கும் முறை, மீடியாக்களிடம் பேசும் முறை என அனைத்து விஷயங்களிலும் சீனியர் வீரர்களை பின்பற்ற வேண்டியது இருந்தது.

தற்போது நீயும், விராட் கோலியும் தான் சீனியர்கள். சீனியர் வீரர்களுக்கும், ஜூனியர் வீரர்களுக்குமான சிறிய இடைவெளி எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது.

இளம் வீரர்கள் விருந்து நிகழ்ச்சிகளில் தற்போது கலந்து கொள்வதைப் போல் எங்கள் காலத்தில் நினைத்து கூட பார்க்க முடியாது. மேலும் இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் ஹர்திக் பாண்ட்யா, லோகேஷ் ராகுல் ஆகியோர் பெண்கள் குறித்து பேசி விமர்சனங்களுக்கு  ஆளானது போன்ற விஷயங்கள் எங்கள் காலத்தில் கிடையாது.” என்று யுவராஜ் சிங் கூறினார்.

Related posts

ஆஷஸ் டெஸ்ட்: முதல்நாள் ஆட்டம் மழையால் ரத்து

TamilSportsNews

அணி வீரர்களின் ஊதியம் உயர்த்தப்படும் – பா.சிவந்தி ஆதித்தன்

TamilSportsNews

திருச்சி வாரியர்சை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறிய திண்டுக்கல் அணி

TamilSportsNews

Leave a Comment