Cricket

இங்கிலாந்தை எதிர்கொள்ள நாங்கள் ரெடி.. பாகிஸ்தான் கேப்டன் அசார் அலி!!

கொரோனா ஊரடங்கு காரணமாக கிரிக்கெட் போட்டிகள் எதுவும் நடைபெறாமல் இருந்த நிலையில், இங்கிலாந்து- வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டி நடைபெற்றது. இதில் இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியது.

இதனையடுத்து அதன்பின்னர் பயிற்சியில் ஈடுபட்டுவருகின்றனர் பாகிஸ்தான் வீரர்கள். இங்கிலாந்து-பாகிஸ்தான் அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மான்செஸ்டரில் வருகிற 5 ஆம் தேதி தொடங்குகிறது. இந்த தொடருக்கான 20 பேர் கொண்ட பாகிஸ்தான் அணி  சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.

இங்கிலாந்தை எதிர்கொள்ள நாங்கள் ரெடி.. பாகிஸ்தான் கேப்டன் அசார் அலி!!

பாகிஸ்தான் அணி கேப்டன் அசார் அலி கூறும்போது,  ‘‘ஷாஹீன் ஷா மற்றும் நசீம், சோஹைல் கான், முகமது அப்பாஸ் ஆகியோர் சிறந்து விளங்கி வருகின்றனர், அவர்கள் அணிக்கு கூடுதல் வலுவாக இருப்பார்கள்.  அவர்கள் எங்கள் அணியில் இருப்பது எங்களுக்கு அதிர்ஷ்டமே ஆகும்.

எங்கள் அணி பந்து வீச்சாளர்கள் இங்கிலாந்து அணிக்கு டஃப் கொடுப்பார்கள். யாசீர் ஷா பற்றி உங்களுக்கே தெரியும், அவர் தற்போது வலுவான நிலையில் உள்ளார். கொரோனா லாக்டவுனுக்குப் பின்னர் மீண்டும் களம் திரும்புவது சவாலான அனுபவம்.

பயிர்சியினபொது முதலில் பந்து வீச்சாளர்கள் கடினமாக உணர்ந்தனர், அதன்பின்னர் பயிற்சியினைத் தொடர்ந்து செய்து பழைய நிலையை அடைந்தனர். இங்கிலாந்தை எதிர்கொள்ள நாங்கள் ரெடியாக இருக்கிறோம்” என்று அவர் கூறியுள்ளார்.

Related posts

அடிச்சு பிடிச்சு போட்ட கோல்… சமநிலையாகிப் போன ஆட்டம்!!

TamilSportsNews

மைதானத்தை அதிரவிட்ட லாபஸ்சாக்னே…. தூள் கிளப்பிய ஆஸ்திரேலிய அணி!!

TamilSportsNews

நான் பார்த்ததில் ஆட்டம்னா இதுதாங்க ஆட்டம்… இயன் சேப்பல் பாராட்டு!!

TamilSportsNews

Leave a Comment