Cricket

இரண்டு நாட்களில் சொந்தநாடு திரும்புகிறார் வெயின் பிராவோ.. சிஎஸ்கே சிஇஓ அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

சார்ஜாவில் அக்டோபர் 17 ஆம் தேதி நடைபெற்ற ஐபிஎல் போட்டியின் 34 வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் களம் கண்டன. 

இந்தப் போட்டியில் பிராவோவுக்குப் பதிலாக ஜடேஜாவுக்கு வழங்கப்பட்டது, அதாவது பிராவோ ஆட்டத்தின் பாதியில் விலகிய நிலையில் கடைசி வரை களம் திரும்பவில்லை.இதுகுறித்து தோனி பேசும்போது பிராவோ உடல் தகுதியுடன் இல்லாததால் களத்தில் இருந்து வெளியேறினார், அதனால் தான் ஜடேஜாவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது என்று கூறி இருந்தார்.

இரண்டு நாட்களில் சொந்தநாடு திரும்புகிறார் வெயின் பிராவோ..  சிஎஸ்கே சிஇஓ அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

அதனைத் தொடர்ந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் பேட்டி அளிக்கும்போது பிராவோவுக்கு வலது இடுப்பு பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாகவே அவர் வெளியேறினார் என்றும், மேலும்  அவர் உடல் தகுதியினை எட்டும்வரை ஓரிரு வாரங்கள் போட்டியில் பங்கேற்க முடியாமல் போகலாம் என்றும் கூறி இருந்தார்.

காயம் காரணமாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிரான போட்டியில் பிராவோ விளையாடவில்லை. இந்த நிலையில் மீதமுள்ள போட்டிகளில் பிராவோ விளையாடவில்லை என்றும், அவர் இரண்டு நாட்களுக்குள் சொந்த நாடு திரும்ப உள்ளார் என்றும் தகவல் வெளியான நிலையில் தற்போது அந்தத் தகவலை சென்னை சூப்பர் கிங்ஸ் சிஇஓ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

Related posts

சாதனையை முறியடித்த 100 வது போட்டி…. பயம் காட்டிய கேப்டன் ரோகித் சர்மா!!!

TamilSportsNews

அத்துமீறல்களை நிறுத்தி, அந்தப் பணத்தைக் கொண்டு மருத்துவமனை, பள்ளிகளை கட்டுங்கள்… அக்தருக்கு கபில்தேவ் கொடுத்த பதிலடி!!

TamilSportsNews

பிரியாணிக்கு தடை விதித்துள்ள பாகிஸ்தான் பயிற்சியாளர்….

TamilSportsNews

Leave a Comment