Tennis

ஆஷ்லி பார்டியைத் தொடர்ந்து அமெரிக்க ஓப்பன் டென்னீசிலிருந்து விலகும் சீனாவின் நம்பர் ஒன் வீராங்கனை வாங் குவாங்!!

கொரோனா அச்சுறுத்தலால் உலகம் முழுவதும் 200 நாடுகளில் கட்டுப்படுத்தப்பட்ட ஊரடங்கானது அமலில் உள்ளது. இதனால் டோக்கியோ ஒலிம்பிக், டி 20 உலகக் கோப்பை உட்பட எந்தப் போட்டிகளும் நடைபெறவில்லை.

தற்போது பெரிய அளவிலான நஷ்டம் ஏற்படாமல் தடுக்கும் பொருட்டு, விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.  அந்தவகையில் கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க்கில் ஆகஸ்ட் 31 ஆம் தேதி துவங்கி செப்டம்பர் 13 ஆம் தேதி வரை நடக்கிறது.

ஆஷ்லி பார்டியைத் தொடர்ந்து அமெரிக்க ஓப்பன் டென்னீசிலிருந்து விலகும் சீனாவின் நம்பர் ஒன் வீராங்கனை வாங் குவாங்!!

கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் இந்த போட்டியானது உயிர் பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி நடத்தப்படுகிறது. ஆனால் அதிர்ச்சியளிக்கும் விதமாக அமெரிக்க ஓபனில் இருந்து விலகுவதாக சீனாவின் நம்பர் ஒன் வீராங்கனை வாங் குவாங் விலகுவதாக அறிவித்துள்ளார்.

அவர் கூறுகையில், “கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தற்போதைய சூழ்நிலையினைக் கருத்தில் கொண்டே இந்த கடினமான முடிவினை எடுக்கிறேன். குடும்பத்தினர் நலனைக் கருத்தில் கொள்வதும் முக்கியமானதாகும். அதனால்  ந்த முறை சின்சினாட்டி மற்றும் அமெரிக்க ஓபனில் இருந்து விலகுகிறேன்.

அடுத்த சீசனில் இந்த போட்டியில் நிச்சயம் பங்கேற்பேன், அதனை எதிர்பார்த்தும் காத்திருக்கிறேன்” என்று கூறியுள்ளார்.

நேற்று அமெரிக்க ஓபனில் இருந்து விலகுவதாக வீராங்கனை ஆஷ்லி பார்ட்டி அறிவித்தார். மேலும் கொரோனா அச்சுறுத்தலே தான் போட்டியில் பங்கேற்காததற்கு காரணம் என்றும் பேட்டி அளித்து இருந்தார்.

Related posts

பிரெஞ்ச் ஓபன்: ஜோகோவிச்சை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார் நடால்

TamilSportsNews

இத்தாலி ஓபன் டென்னிஸ் : நடால் தோல்வி, ஜோகோவிச் வெற்றி!!

TamilSportsNews

பிரேசில் டென்னீஸ் வீரருக்கு கொரோனா… தன்னம்பிக்கையோடு போட்ட ட்வீட்!!

TamilSportsNews

Leave a Comment