ஐபிஎல் போட்டியானது நடந்து முடிந்தபின்னர் இந்திய அணி ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகின்றது.
இந்திய அணியின் கேப்டன் கோலி ஆஸ்திரேலிய சுற்றுப் பயணத்தில் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடமாட்டார் என்று பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருந்தது.
அதாவது கொரோனா ஊரடங்கின்போது விராட் கோலி, அனுஷ்கா ஷர்மா கர்ப்பமாக இருப்பதாக ட்விட்டரில் பதிவிட்டு இருந்தார். மேலும் அனுஷ்காவுக்கு ஜனவரி மாதம் குழந்தை பிறக்க உள்ளதாகவும் அவர் கூறி இருந்தார்.

அதாவது இந்திய அணி நவம்பர் மாதம் 27 ஆம் தேதி துவங்கி ஜனவரி மாதம் வரை ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் போட்டிகளில் பங்குபெற்று வருகின்றது.
தற்போது கோலியின் மனைவி அனுஷ்கா சர்மா பிரசவம் நெருங்குவதை ஒட்டி, மருத்துவர் ஆலோசனைப் படி சில உடற்பயிற்சிகளை செய்து வருகின்றார், அந்தவகையில் தற்போது அனுஷ்கா சர்மா தலைகீழாக நின்று உடற் பயிற்சி செய்கிறார், அவருக்கு உதவும் வகையில் கோலி அருகில் நின்று இருக்கிறார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.