Football

கொரோனா சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய யுவென்டஸ் கால்பந்து கிளப் அணி வீரர் டைபாலா!!

சீனாவில் உருவான கொரோனா வைரஸால் உலகம் முழுவதும் 9,38,373 பேர் பாதிக்கப்பட்டு உள்ள நிலையில், மொத்தமாக கொரோனா வைரஸால் உயிர் இழந்தோர் எண்ணிக்கை 47273  ஐக் கடந்துள்ளது.

சீனாவில் சிகிச்சை அளித்துவந்த மருத்துவக் குழு, இத்தாலிக்கு பயணம் செய்து சிகிச்சை அளிக்கும் அளவு இத்தாலியின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

அந்த வகையில் இத்தாலியின் யுவென்டஸ் கால்பந்து கிளப் அணி வீரர் பவுலா டைபாலாவுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி  கடந்த வாரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

கொரோனா சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய யுவென்டஸ் கால்பந்து கிளப் அணி வீரர் டைபாலா!!

மேலும் அவரது காதலி ஒரியானாவுக்கும் கொரோனா பாதிப்பு இருப்பதால் அவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.  அதுகுறித்த விஷயங்களை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.

தற்போது கொரோனா சிகிச்சை முடிந்து, வீடு திரும்பியுள்ள இவர், Stay at Home என்ற வார்த்தையால் மட்டுமே கொரோனாவை கட்டுப்படுத்த முடியும் என்று கூறியுள்ளார்.

இதுகுறித்து டைபாலா கூறும்போது ‘‘கொரோனா பல ஆயிரக்கணக்கிலான உயிர்களைக் குடித்துவிட்டது. நான் எனக்கு கொரோஅனா வைரஸ் வரும் என நினைக்கவில்லை.

ஆரம்பத்தில் அதிகம் இருமல் இருக்க, தொடர்ந்து சோர்வாடைந்தேன். அடுத்து குளிர் காய்ச்சல் போல் இருக்க நான் கொரோனாவாக இருக்காது என நினைத்தேன். ஆனால் அணியில் மற்ற வீரர்களுக்கு வந்ததையடுத்து எனக்கு சோதித்தபோது கொரோனா இருப்பது உறுதியானது.

தலைவலி, மூச்சு விட சிரமம் என பல வகைகளில் பாதிக்கப்பட்டேன். தயவுகூர்ந்து அனைவரும் வீட்டிலேயே இருங்கள்” என்று கூறியுள்ளார்.

Related posts

கோபா அமெரிக்கா கால்பந்தில் அரைஇறுதிக்கு முன்னேறிய அர்ஜென்டினா, சிலி அணிகள்

TamilSportsNews

மார்ச் 31 ஆம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்ட இந்திய கால்பந்து லீக் போட்டிகள்!!

TamilSportsNews

உலக கோப்பை கால்பந்தில் அடுத்த சுற்றுக்கு தகுதியான இங்கிலாந்து & ஜப்பான்

TamilSportsNews

Leave a Comment