இந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே 2018 ஆம் ஆண்டு நான்கு போட்டிகள் டெஸ்ட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வென்றது.
2 ஆண்டுகள் கழித்து இந்தத் தோல்விக்குப் பதிலடி கொடுக்க உள்ளதாக டிம் பெய்ன் கூறியுள்ளார்.
இதுகுறித்து டிம் பெய்ன் கூறுகையில் ‘‘இந்தியா- ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரில் 2018 ஆம் ஆண்டு நாங்கள் தோல்வி அடைந்தோம். உண்மையில் ஆண்டுகள் 2 ஆன போதிலும், அந்தத் தோல்வி எங்களை நச்சரித்துக் கொண்டே இருக்கிறது.

நாங்கள் இந்த ஆண்டு அந்தத் தோல்விக்குப் பதிலடி கொடுப்போம், அதற்காக இந்திய அணிக்கு எதிரான போட்டியினை எதிர்நோக்கிக் காத்துக் கொண்டு இருக்கிறோம்.
தற்போது ஆஸ்திரேலிய அணி மிகச் சிறந்த ஆல்-ரவுண்ட் அணியாக உள்ளது. இந்த ஒன்றரை ஆண்டு கால அளவில் ஆஸ்திரேலிய அணியில் பல வியக்கத்தக்க மாற்றங்கள் நடந்துள்ளன, அணி வீரர்களும் அடுத்த கட்டத்தை நோக்கி முன்னேறி உள்ளனர்.
நாங்கள் எங்களுடைய சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறோம் என நினைக்கிறோம்” என்று கூறியுள்ளார்.