Cricket WorldCup 2019

உலக கோப்பையில் வென்ற விதம் நியாயமற்றது – ஒப்புக்கொண்ட மோர்கன்

உலக கோப்பையின் இறுதிப்போட்டியில் கிடைத்த முடிவு நியாயம் இல்லாதது என்று சாம்பியனான இங்கிலாந்தின் கேப்டன் இயன் மார்கன் ஒப்புக் கொண்டுள்ளார். 12வது உலக கோப்பை தொடர் கடந்த 14ம் தேதியோடு முடிவடைந்து.

இறுதிப்போட்டியில் விதிமுறைகளின் அடிப்படையில் இங்கிலாந்து வெற்றி பெற்று முதன் முறையாக உலக கோப்பையை கைப்பற்றியது. கிரிக்கெட்டை கண்டுபிடித்த நாடு, 44 ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக கோப்பையை வென்றது.

உலக கோப்பையில் வென்ற விதம் நியாயமற்றது – ஒப்புக்கொண்ட மோர்கன்


பரபரப்பான இறுதிப் போட்டியில் இரு அணிகளும் 241 ரன்கள் குவித்து டிரா செய்தது. அதன்பிறகு நடைபெற்ற சூப்பர் ஓவரும் டிரா ஆனது. இதனால் பவுண்டரிகளின் அடிப்படையில் இங்கிலாந்து அணி கோப்பையை வென்றது. 

இந்த முடிவு குறித்து பல்வேறு சர்ச்சைகள் ஏற்பட்டது. இந்நிலையில் இந்த முடிவு குறித்து இங்கிலாந்து கேப்டன் இயன் மார்கன் முதல் முறையாக பேசியுள்ளார். அவர் பேசியது, “பைனலில் எடுக்கப்பட்ட முடிவு நியாயமானதல்ல. இந்த போட்டியில் ஒரு தருணம் கூட ஒரு அணிக்கு சாதகமாக இருக்கவில்லை. இரு அணிகளுமே வெற்றி பெறும் நிலையில் விளையாடின. 

சமபலத்துடன் விளையாடிய இரு அணிகளும் வெற்றி தகுதியானவர்கள். போட்டி முடிந்ததும் நான் வில்லியம்சனிடம் பேசினேன். அவரும் குழப்பத்தில் தான் இருந்தார். 


உலக கிரிக்கெட் வரலாற்றில் இதுபோன்றதொரு பைனல் நடக்கவே இல்லை என்று சொல்லுவேன். மேலும் இது ஒரு சமமான போட்டி இல்லை. எது எப்படி இருந்தாலும் உலக கோப்பையை வென்றதில் எங்களுக்கு மகிழ்ச்சி தான் என்று கூறினார். 


Related posts

உலக கோப்பை கிரிக்கெட்டில் இங்கிலாந்து–நியூசிலாந்து அணியின் வரலாறு

TamilSportsNews

தோனியின் இந்த முடிவு ரசிகர்களை பாதிக்கும்… !!

TamilSportsNews

தோல்வியால் மனமுடைந்த நியூசிலாந்து வீரர் ஜேம்ஸ் நீஷம்

TamilSportsNews

Leave a Comment