Cricket

ஐபிஎல் ஸ்பான்ஷர்ஷிப் பிரச்சினையால் பங்குபெறும் அணிகளுக்கு வந்த சோதனை!!

13 வது இந்தியன் பிரிமியர் லீக்  குறித்து கடந்த வாரம் நடத்தப்பட்ட ஆலோசனைக் கூட்டத்தின் முடிவில் ஐபிஎல் போட்டியானது ஐக்கிய அரபு எமிரேகத்தில் நடைபெறும் என்றும், மேலும் செப்டம்பர் 19 ஆம் தேதி தொடங்கி நவம்பர் 8 ஆம் தேதி முடிவடையும் என்றும் பிசிசிஐ தரப்பில் இருந்து செய்திகள் வெளியாகின.

மேலும் இந்தியா- சீனா எல்லைப் பிரச்சினையால் சீன பொருட்களுக்கு இந்தியாவில் தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில் சீன செல்போன் நிறுவனமான விவோவின் ஸ்பான்சர்ஷிப்புக்கு ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், 2020 ஆம் ஆண்டு ஐ.பி.எல். ஸ்பான்சர்ஷிப்பில் இருந்து விலக விவோ நிறுவனம் முடிவு செய்துள்ளது.

ஐபிஎல் ஸ்பான்ஷர்ஷிப் பிரச்சினையால் பங்குபெறும் அணிகளுக்கு வந்த சோதனை!!

இதனால் இந்த ஆண்டு ஒப்பந்தம் முறியடிக்கப்படுகிறது,  தற்போதைய சூழலில் அதுவும் மிகவும் குறுகிய காலமே உள்ள நிலையில் ஐ.பி.எல். போட்டிக்கான புதிய ஸ்பான்சரை தேடுவதில் இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

மேலும் விவோ ஒவ்வொரு அணிகளுக்கும் ரூ.20 கோடி வழங்கிய நிலையில் அணிகளுக்கு கிடைக்கும் வருவாயில் நிச்சயம் பாதிப்பு ஏற்படும் என்று கூறப்படுகின்றது.

அதுமட்டுமின்றி இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு கிடைக்கும் வருவாயிலும் நிச்சயம் பாதிப்பு ஏற்படும் என்று தெரிகின்றது, ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளதால் செலவினங்களும் கூடுதலாக இருக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் மற்றொருபுறம் யார் அந்த ஐபிஎல் ஸ்பான்ஷர்ஷிப் என்ற கேள்வியும் எழுகிறது.

Related posts

அனுஷ்காவின் பெயரை கெடுக்காதீர்கள்… மனைவிக்கு சப்போர்ட் பண்ணிய கோலி!!

TamilSportsNews

குடும்பமாவது ஒண்ணாவது… போய் வெளயாடுங்க அவ்ளோதான் சொல்லிட்டேன்… கண்டிஷன் போட்ட பிசிபி

TamilSportsNews

சிக்சர்களை விளாசும் டெக்னிக்… ரகசியத்தை சொன்ன ரோஹித்!!

TamilSportsNews

Leave a Comment