Cricket

ஒத்தி வைக்கப்பட்ட காலமானது காயத்தில் இருந்து மீண்டு வர எனக்கு கிடைத்த கூடுதல் நேரமாகும்… தீபக் சாஹர் சொல்கிறார்!!

13 வது ஐ.பி.எல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மார்ச் 29 ஆம் தேதி நடைபெற இருந்தது. உலக அளவில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை அதிகமானதைத் தொடர்ந்து, ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரை ஏப்ரல் 15 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பதாக பிசிசிஐ மற்றும் ஐசிசி அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

இருப்பினும் இதுகுறித்த முடிவுகள் ஏப்ரல் 15 ஆம் தேதிக்குப் பின்னர், கொரோனாவின் தாக்கத்தினைக் கருத்தில் கொண்டே எடுக்கப்படும் என்றும் தகவல்கள் பிசிசிஐ தரப்பில் வெளியாகின.

ஐபிஎல் போட்டியினை ஒத்திவைத்ததால் பலரும் சோகத்தில் உள்ள நிலையில், ஒத்தி வைக்கப்பட்ட இந்த காலத்தில் காயத்தில் இருந்து மீண்டுவர முடிந்தது என வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர் தெரிவித்துள்ளார்.

ஒத்தி வைக்கப்பட்ட காலமானது காயத்தில் இருந்து மீண்டு வர எனக்கு கிடைத்த கூடுதல் நேரமாகும்… தீபக் சாஹர் சொல்கிறார்!!

2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான ஆட்டத்தின்போது முதுகுப் பகுதியில் ஏற்பட்ட காயம்  காரணமாக இவர் சிகிச்சை பெற்று வந்தார். மூன்று மாதங்கள் முடிந்துள்ள நிலையில் சாஹர், தற்போது குணமடைந்துள்ளார்.

ஐபிஎல் போட்டி திட்டமிட்டப்பட்டபடி நடந்திருக்கும்பட்சத்தில் சாஹர் பங்கேற்க வாய்ப்பு இருந்திருக்காது, தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளதால் அவர் உடல் நலம் தேறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது, ‘‘ஐபிஎல் தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ள செய்தியினைக் கேட்டபோது எனக்கான வாய்ப்பு காத்திருந்ததாக நினைத்தேன். இந்த ஒத்தி வைக்கப்பட்ட காலமானது காயத்தில் இருந்து மீண்டு வர எனக்கு கிடைத்த கூடுதல் நேரமாகும்.

ஐபிஎல் போட்டியானது திட்டமிட்டபடி தொடங்கி  இருந்தால் நான் சில போட்டிகளை இழந்திருப்பேன். உடற்தகுதியுடன் இருக்க போதுமான அளவு பயிற்சிகளை செய்து வருகிறேன். உடலினை மேம்படுத்தும் விதமான உடற்பயிற்சிகளில் கூடுதல் கவனம் செலுத்தி பயிற்சி செய்கிறேன்” என்று கூறியுள்ளார்.

Related posts

என்னை போன்றவர்களுக்கு நடக்கும் சமூக அநீதிக்கு எதிராக நீங்கள் ஆதரவு அளிக்கமாட்டீர்களா?… டேரன் சேமியின் பதிவு!!

TamilSportsNews

துவை துவைன்னு துவைச்சிட்டாங்களே… அதிரடித்த இந்தியா.. !!

TamilSportsNews

கோலிகூட என்னைக் கம்பேர் பண்ணாதீங்க… பாபர் அசாம் ஓப்பன் டாக்!!

TamilSportsNews

Leave a Comment