Cricket

இனவெறிப் பிரச்சினை கிரிக்கெட்டிலும் இருக்கிறது.. கிறிஸ் கெய்ல் பேச்சு!!

அமெரிக்காவில் கருப்பு இன நபரான ஜார்ஜ் பிளாய்ட்  என்பவரை அமெரிக்க போலீஸ் அதிகாரி முழங்காலால் கழுத்தில் அழுத்தி, துடிதுடிக்க கொன்ற சம்பவம் அரங்கேறியது. கருப்பு இன நபர் தன்னை விட்டுவிடும்படி கதறிய சம்பவம் உலகம் முழுவதிலும் உள்ள பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

அமெரிக்காவில் போராட்டம் வெடிப்பதைப் போல், உலகம் முழுவதிலும் உள்ள  பலர் கருப்பு இனத்தை சேர்ந்த ஜார்ஜ் பிளாய்ட்டின் மரணத்துக்கு எதிராக தங்களது எதிர்ப்பினைக் காட்டி வருகின்றனர். அந்தவகையில் வெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் வீரர் கிறிஸ் கெய்ல் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

இனவெறிப் பிரச்சினை கிரிக்கெட்டிலும் இருக்கிறது.. கிறிஸ் கெய்ல் பேச்சு!!

மேலும் அவர் பதிவிட்டதாவது, “கருப்பு இன மக்களுக்கு எதிராக இதுபோன்ற சம்பவங்கள் ஜனநாயக ஆட்சியில் நடைபெறுவது சிறப்பான ஒன்று கிடையாது. இனவெறி பிடித்தவர்கள் மற்ற மக்களையும் மனிதர்களாகப் பார்க்க வேண்டும்.

நான் உலகின் பல பகுதிகளுக்குச் சென்றபோது, பலவிதமான மனக் காயங்களுக்கு ஆளாகி இருக்கிறேன். உண்மையில் என்னைப் பலர் கேலி, கிண்டல் செய்து இனவெறி தாக்குதல் நடத்தியுள்ளனர். இனவெறி கிரிக்கெட்டிலும் இருக்கிறது. ஆனால் நான் காயமுற்றாலும், ஒவ்வொரு முறையும் என்னைத் தைரியமானவனாக வெளிக் கொண்டு வந்திருக்கிறேன். கருப்பு சக்தி வாய்ந்தது. கருப்பு எனது பெருமை” என்று கூறியுள்ளார்.

Related posts

தயாரான இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் … இதோ அணி விவரம்!!

TamilSportsNews

படுமோசமாக ஆடிய மும்பை அணி… ஈசியா ஜெயிச்ச தமிழ்நாடு அணி!!

TamilSportsNews

டஃப் கொடுத்த வெஸ்ட் இண்டீஸ் அணி.. தெறிக்கவிட்ட விராட் கோலி…!!

TamilSportsNews

Leave a Comment