Cricket

ஐபிஎல் திருவிழா போல் இருந்தது… நினைவுகூர்ந்த பாகிஸ்தான் வீரர் உமர் குல்!!

இந்திய கிரிக்கெட் வாரியம் என்னும் பிசிசிஐ 2008 ஆம் ஆண்டு ஐபிஎல் டி20 லீக் தொடரினைத் துவக்கியது. இந்தத் தொடர் அப்போது இந்த அளவு வரவேற்பினைப் பெறும் என யாரும் எதிர்பார்க்கவில்லை. 2008 ஆம் ஆண்டு இந்தியா- பாகிஸ்தான் எல்லைப் பிரச்சினைக்குப் பின்னரே பாகிஸ்தான் அணி வீரர்கள் ஐபிஎல்லில் கலந்துகொள்ள அனுமதி மறுக்கப்பட்டது.

அதற்கு முன்னர், அவர்கள் ஐபிஎல்லில் விளையாடியபோது இந்திய ரசிகர்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பினைப் பெற்றனர். பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் உமர் குல் 2008 ஆம் ஆண்டு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சார்பில் விளையாடினார்.

ஐபிஎல் திருவிழா போல் இருந்தது… நினைவுகூர்ந்த பாகிஸ்தான் வீரர் உமர் குல்!!

அந்தவகையில் தற்போது 2008 ஆம் ஆண்டு ஐபிஎல்லில் விளையாடிய போது, ஐபிஎல் திருவிழா போன்று இருந்தது என்று கூறியுள்ளார்.

உமர் குல் கூறும்போது, ‘‘ஐபிஎல் துவங்கப்பட்டபோது எங்களுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. ஐபிஎல் ஏலம் எடுக்கப்பட்ட தருணத்தை என்னால் எப்போதும் மறக்க முடியாது. இந்தியா சென்றபோது, எங்கள் அணி வீரர்களுக்கு இந்திய ரசிகர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.

ஐபிஎல் திருவிழா போல் இருந்தது. போட்டிக்குப் பின்னர், ஓட்லில் போட்டி குறித்த நிகழ்ச்சி நடைபெற்றது. எங்கள் அணியின் உரிமையாளரான ஷாருக் கானும் அதில் பங்கேற்றார். உரிமையாளர், ஸ்பான்சர், பிராண்ட் என அனைவரும் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். நாங்கள் அவர்களுடன் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டோம்” என்று கூறியுள்ளார்.

Related posts

ஹலோ பாஸ்… அது சூச்சின் இல்ல, சச்சின்….. டிரம்ப்பின் உச்சரிப்பை கிண்டலடிக்கும் ரசிகர்கள்!!

TamilSportsNews

டஃப் கொடுத்த வெஸ்ட் இண்டீஸ் அணி.. தெறிக்கவிட்ட விராட் கோலி…!!

TamilSportsNews

பரோடா பெண்கள் அணிக்கு பாலியல் தொல்லை… தலைமைப் பயிற்சியாளர் இடைநீக்கம்!!

TamilSportsNews

Leave a Comment