Tennis

5 மாதங்களுக்குப் பின்னர் துவங்கவுள்ள முதல் சர்வதேச டென்னீஸ் தொடர்.. ரசிகர்கள் மகிழ்ச்சி!!

கொரோனா அச்சுறுத்தலால் உலகம் முழுவதும் 200 நாடுகளில் கட்டுப்படுத்தப்பட்ட ஊரடங்கானது அமலில் உள்ளது. இதனால் டோக்கியோ ஒலிம்பிக், டி 20 உலகக் கோப்பை உட்பட எந்தப் போட்டிகளும் நடைபெறவில்லை.

தற்போது பெரிய அளவிலான நஷ்டம் ஏற்படாமல் தடுக்கும் பொருட்டு, விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.  அந்தவகையில் கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க்கில் ஆகஸ்ட் 31 ஆம் தேதி துவங்கி செப்டம்பர் 13 ஆம் தேதி வரை நடக்கிறது.

5 மாதங்களுக்குப் பின்னர் துவங்கவுள்ள முதல் சர்வதேச டென்னீஸ் தொடர்.. ரசிகர்கள் மகிழ்ச்சி!!

இந்தநிலையில்ஏறக்குறைய 5 மாதங்களுக்குப் பின்னர் டென்னீஸ் போட்டியானது துவங்கவுள்ளது. அதாவது இத்தாலியில் 31 வது பாலெர்மோ லேடீஸ் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி இன்று துவங்கி 9 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

கொரோனா அச்சுறுத்தலுக்குப் பின்னர் நடக்கும் முதல் சர்வதேச டென்னிஸ் தொடர் என்பதால், ரசிகர்கள் போட்டி குறித்து எதிர்பார்த்துக் காத்துக் கொண்டுள்ளனர். இது கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தக்க பாதுகாப்புடன் நடத்தப்பட உள்ளது.

இந்த போட்டியில் பங்கேற்கவிருந்த வீராங்கனைகளில் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட அவர் போட்டியில் இருந்து விலக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். பிற வீராங்கனைகளுக்கும் 3 கட்டங்களாக கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

Related posts

லாஸ்ட் மினிட்ல எடுத்த முடிவு… இந்த ஆட்டத்தில் சானியா மிர்சா விலகல்

TamilSportsNews

ரசிகர்கள் முன்னிலையில் விளையாடும் ஆட்டத்திற்கு எப்போதும் உயிர் இருக்கும்.. சானியா உருக்கம்!!

TamilSportsNews

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியினைக் காண ரசிகர்களுக்கு அனுமதி!!

TamilSportsNews

Leave a Comment