Tennis

டென்னிஸ் வீராங்கனை எவ்ஜினுடன் விருந்து சாப்பிட ரூ.65 லட்சம் ஏலம் எடுத்த ரசிகர்

சீனாவில் டிசம்பர் மாதம் உருவான கொரோனா வைரஸ் தற்போது உலகின் பல நாடுகளையும் அச்சுறுத்தி வருகிறது, கொரோனாவால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நிலையில் உலகின் பல நாடுகளிலும் அனைத்துத் தொழில்களும் முடங்கியுள்ளன.

தொற்றுப் பரவாமல் தடுக்கும் பொருட்டு, பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவால் ஏழை, எளிய மக்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு உதவும் பொருட்டு பிரபலங்கள் பலரும் தங்களால் இயன்ற உதவிகளைச் செய்து வருகின்றனர்.

அந்தவகையில் கனடா டென்னிஸ் வீராங்கனை எவ்ஜின் பவுச்சார்ட் ஏழை, எளிய மக்களுக்கு உதவும் பொருட்டு நிதி திரட்டி வருகிறார். அதாவது அமெரிக்காவில் உள்ள ஒரு அறக்கட்டளை நடத்தும் ஏலத்தில் அவர் பங்கேற்றுள்ளார்.

டென்னிஸ் வீராங்கனை எவ்ஜினுடன் விருந்து சாப்பிட ரூ.65 லட்சம் ஏலம் எடுத்த ரசிகர்

அதாவது எவ்ஜினுடன் இரவு உணவு சாப்பிட விரும்புவோர் என மொத்தமாக இந்த ஏலத்தில் 37 பேர் பங்கேற்றனர்.

இந்த ஏலத்தில் ரூ. 65 லட்சம் வழங்கி ரசிகர் ஏலத்தினை முடித்து வைத்தார். அதாவது இந்த ஏலத்தின் மூலம் கிடைத்த பணத்தினை நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளனர்.

இந்த ஏலத்தில் ஜெயித்தவருக்கு கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியை சொகுசு இருக்கையில் பார்க்கும் அனுமதி, விமான கட்டணம், பவுச்சார்ட்டுடன் செல்பி, ஆட்டோகிராப்,  எவ்ஜினுடன் இரவு உணவு போன்ற அனைத்தும் கிடைக்கும்.

Related posts

அமெரிக்க ஓபன் டென்னிஸ் குறித்து ஜூன் மாத இறுதிக்குள் முடிவு எடுத்துடுவோம்… தலைமை நிர்வாகி பேச்சு!!

TamilSportsNews

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: நடால் கால் இறுதிக்கு தகுதி!!

TamilSportsNews

பல சவால்களைத் தாண்டி நான் இந்த முடிவினை எடுத்துள்ளேன்.. ஜோகோவிச் பேட்டி!!

TamilSportsNews

Leave a Comment