Cricket

தல தோனிக்கு Common Display Picture வெளியிட்ட ரசிகர்கள்!!

ஜூலை 7 ஆம் தேதி இந்திய கிரிக்கெட்டின் நாயகன் மகேந்திர சிங் தோனியின் 39 வது பிறந்த தினம் ஆகும். இந்தியா மட்டுமின்றி, உலகம் முழுவதும் சச்சினுக்கு அடுத்தபடியாக அதிக ரசிகர்களைக் கொண்டவர் என்ற பெருமையைக் கொண்டவர் தோனி.

பிறந்த நாள் வர இன்னும் 1 வாரங்கள் ஆகவுள்ள நிலையில், தோனி ரசிகர்கள் தற்போதில் இருந்து திருவிழா போல சமூக வலைதளங்களில் கொண்டாட ஆரம்பித்துவிட்டனர்.

இந்திய கிரிக்கெட் அணியில் ரசிகர்கள் மட்டுமின்றி சக வீரர்களாலும் அதிக அளவில் விரும்பப்படுபவர் தோனி. இவரை தல என்றும் கூல் கேப்டன் என்றும் ரசிகர்கள் செல்லமாக அழைப்பது வழக்கம்.

தல தோனிக்கு Common Display Picture வெளியிட்ட ரசிகர்கள்!!

ஆனால் கடந்த ஆண்டு உலகக் கோப்பை போட்டிக்குப் பின்னர் தோனி எந்தவகையான கிரிக்கெட் போட்டியிலும் பங்குபெறவில்லை, தோனி மீண்டும் களம் திரும்ப வேண்டும் என்பதே ரசிகர்களின் ஒரே ஆசையாக இருந்து வருகிறது.

எப்படியும் ஐபிஎல்லில் அவரது ஆட்டத்தினைப் பார்த்துவிட வேண்டும் என்று எண்ணியவர்களுக்கு கொரொனா ஊரடங்கால் மிஞ்சியது ஏமாற்றமே ஆகும்.

தோனியின் தீவிர ரசிகர்கள் தோனி ஓய்வு முடிவை மாற்றவேண்டும் என்ற நோக்கில்,  கடந்த ஆண்டு எங்களுக்காக இந்திய அணியில் ஆடவேண்டும். இந்த பரிசினை அவரது பிறந்தநாளன்று எங்களுக்கு கொடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் வைத்தனர்.

இந்த நிலையில்,  தற்போது தோனி ரசிகர்கள் Common Display Picture ஒன்றினை தோனியின் பிறந்தநாளினை முன்னிட்டு வைத்துள்ளனர், இது ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலகப் பிரபலங்கள் மத்தியிலும் வைரலாகி வருகிறது.

Related posts

ஐபிஎல் தொடர் சூதாட்டத்திற்காகவே புகழ் பெற்றதாகும்… பாகிஸ்தான் வீரர் குற்றச்சாட்டு!!

TamilSportsNews

டஃப் கொடுத்த வெஸ்ட் இண்டீஸ் அணி.. தெறிக்கவிட்ட விராட் கோலி…!!

TamilSportsNews

4 வருஷம் வெயிட் பண்ணுங்க… வரவுள்ளது பெண்களுக்கான ஐ.பி.எல். போட்டி!!

TamilSportsNews

Leave a Comment