Tennis

டென்னீஸ் குறித்து பெடரரிடம் ஆலோசனை கேட்டுள்ள சச்சின்!!

கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றாலும் ஏதாவது ஒரு வகையில் ரசிகர்களுடன் இணைப்பிலேயே இருந்து வருகிறார், கொரோனா தாண்டவமாடும் இக்காலத்தில் கொரோனா குறித்த விழிப்புணர்வு வீடியோவினை அவ்வப்போது வெளியிட்டு வருகிறார். சமீபத்தில் தனது மகள் சமைத்த ரெசிப்பி போட்டோவினை வெளியிட்டு இருந்தார்.

தற்போது சச்சின் டென்னீஸ் விளையாடும் வீடியோ ஒன்றினை வெளியிட, அது அவரது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. அதாவது கிரிக்கெட் ஜாம்பவானான சச்சின் கிரிக்கெட்டினை அடுத்து டென்னிஸ்மீதும் அதிக ஆர்வம் கொண்டவர்.

டென்னீஸ் குறித்து பெடரரிடம் ஆலோசனை கேட்டுள்ள சச்சின்!!

இவர் சுவிட்சர்லாந்து டென்னீஸ் வீரர் ரோஜர் பெடரரின் தீவிர ரசிகர் என்பதை அவர் பலமுறை கூறியுள்ளார். அந்தவகையில் தற்போது சச்சின் போர் ஹேண்ட் ஷாட் அடிப்பது  போன்ற டென்னிஸ் வீடியோவினை வெளியிட்டு, “போர் ஹேண்ட் ஷாட்டை மேம்படுத்த ஆலோசனை எதுவும் இருக்கிறதா?” என்று கேள்வி கேட்டுள்ளார்.

கிரிக்கெட் ஜாம்பவான் டென்னீஸ் ஜாம்பவானிடம் ஆலோசனை கேட்டதும்போதும் ரசிகர்கள் இதனை ஸ்கிரீன்ஷாட் எடுத்து சமூக வலைதளங்கள் பலவற்றிலும் பகிர்ந்து வருகின்றனர். பெடரர் சச்சினின் கேள்விக்கு பதில் இதுவரை அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

அல்டிமேட் டேபிள் டென்னிஸ் போட்டி இன்று தொடங்குகிறது

TamilSportsNews

இத்தாலி ஓபன் டென்னிஸ்.. அரைஇறுதி வாய்ப்பினைப் பெற்றார் ஜோகோவிச்

TamilSportsNews

தோனியுடன் மதிய உணவு சாப்பிட ஆசை… சானியா ஓப்பன் டாக்!!

TamilSportsNews

Leave a Comment