Cricket

அஸ்வினுக்கு வாய்ப்பு… இறுதிப்போட்டிக்குள் தமிழக அணி!!!

விஜய் ஹசாரே கோப்பையின் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியானது பல்வேறு நகரங்களில் நடைபெற்று வந்தது. மொத்தம் 4 அணிகளாக பிரிக்கப்பட்டு ஆட்டம் நடைபெற்றது. நேற்றைய ஆட்டத்தில் ‘சி’ பிரிவில் உள்ள தமிழக அணி குஜராத்தை களம்கண்டது.

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் நேற்று முன்தினம் முடிவடைந்துள்ளதால் அஸ்வின் தமிழக அணியில் இடம் பெற்றார்.

அஸ்வினுக்கு வாய்ப்பு… இறுதிப்போட்டிக்குள் தமிழக அணி!!!

டாஸ் வென்ற தமிழகம் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதன்படி முதலில் பேட் செய்த குஜராத் அணி 9 விக்கெட்டுக்கு 177 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக துருவ் ரவல் 40 ரன்களும், அக்‌ஷர் பட்டேல் 37 ரன்களும் எடுத்தனர்.


அடுத்து விளையாடிய தமிழக அணியில் முரளிவிஜய் 3 ரன்களும், பாபா அபராஜித் 6 ரன்களும், விஜய் சங்கர் 6 ரன்களும் எடுத்தனர். அடுத்து பல சோதனைகளுக்கு இடையில் அபினவ் முகுந்த் 32 ரன்களும், கேப்டன் தினேஷ் கார்த்திக் 47 ரன்களும் எடுத்தனர்.

ஷாருக்கான், கடைசி 3 ஓவர்களில் 3 சிக்சர்கள் விளாசினார். தமிழக அணி 39 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 181 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

ஷாருக்கான் 56 ரன்களுடனும், வாஷிங்டன் சுந்தர் 27 ரன்களுடனும்  களத்தில் இருந்தனர்.


Related posts

தோனி முக்கியம் இல்லை… ரிஷப் பந்த் மீது கவனம் செலுத்தும் கிரிக்கெட் வாரியம்!!

TamilSportsNews

இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்கள் யாருக்கும் கொரோனா இல்லை… இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு!!

TamilSportsNews

மரத்தின் உச்சிக்கு சென்றாலும் நெட்வொர்க் கிடைக்கவில்லை… நடுவர் அனில் சவுத்ரி பேட்டி!

TamilSportsNews

Leave a Comment