Cricket

தூள் கிளப்பிய துவக்க வீரர்கள்.. தாக்குப் பிடிக்காத ஹோபார்ட் ஹரிகேன்ஸ்.. சிட்னி தண்டருக்கு ஜாலியோ ஜாலி

பிக் பாஷ் டி20 லீக்கில் எலிமினேட்டர் போட்டியானது நேற்று ஹோபார்ட் நகரில் நடைபெற்றது.

இந்த ஆட்டத்தில் சிட்னி தண்டர் மற்றும் ஹோபார்ட் ஹரிகேன்ஸ் அணிகள் களம் கண்டன. இந்தப் போட்டியில் சிட்னி தண்டர் அணி டாஸ் வென்றதுடன் பேட்டிங்கை தேர்வு செய்தது.

மேலும் உஸ்மான் கவாஜா, அலெக்ஸ் ஹேல்ஸ் ஆகியோர் துவக்க வீரர்களாக களம் இறங்கினர். துவக்க வீரர்களின் சிறப்பான ஆட்டம் அணியின் வெற்றிக்கு பக்க பலமாக இருந்தது.

இதன்மூலம் அணியின் ரன் ரேட் வேறு லெவலாக எகிறியது. மேலும் அரை சதத்தினை பூர்த்தி செய்து இருவரும் நிதானமான ஆட்டத்தினை வெளிப்படுத்தினர்.

தூள் கிளப்பிய துவக்க வீரர்கள்.. தாக்குப் பிடிக்காத ஹோபார்ட் ஹரிகேன்ஸ்.. சிட்னி தண்டருக்கு ஜாலியோ ஜாலி

அதன்பின்னர் கவாஜா 54 ரன்களிலும், ஹேல்ஸ் 60 ரன்களிலும், கேப்டன் பெர்குசன் 23 ரன்களிலும், ஆல்-ரோஸ் 21 ரன்களிலும் அவுட் ஆகினர். அதன்பின்னர் சிட்னி தண்டர்ஸ் 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 197 ரன்கள் எடுத்தது

அடுத்து 198 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ஹோபார்ட் அணி சார்பில் மேத்யூ வடே, டி’அர்கி ஷார்ட் ஆகியோர் துவக்க வீரர்களாக களம் இறங்கினர்.

சிட்னி தண்டர் அணியின் பந்து வீச்சு நேர்த்தியாக இருக்க விக்கெட்டுகள் மளமளவென சரிந்தன. இதனால் சிட்னி தண்டர் 57 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Related posts

வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக மோசமாக சொதப்பிய ரோகித்!

TamilSportsNews

அனுமதியின்றி வெளிநாட்டு போட்டியில் ஆடிய வீரர் இடைநீக்கம்

TamilSportsNews

ஊழல் குற்றச்சாட்டு… மேல் முறையீடு செய்துள்ள உமர் அக்மல்!!

TamilSportsNews

Leave a Comment