Cricket

அதிரடித்த சூர்யகுமார் யாதவ். பெங்களூர் அணியை வீழ்த்திய மும்பை அணி!!

அதிரடித்த சூர்யகுமார் யாதவ். பெங்களூர் அணியை வீழ்த்திய மும்பை அணி!!

அபுதாபியில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியின் 48 வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் களம் கண்டன.

இந்த ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் டாஸ் வென்றதுடன் பந்து வீச்சை தேர்வு செய்து ஆட, ராயல் சேலஞ்சர்ஸ் அணி சார்பில் ஜோஷ் பிலிப், தேவ்தத் படிக்கல் ஆகியோர் துவக்க வீரர்களாக களம் இறங்கினர்.

ஜோஷ் பிலிப் 33 ரன்களும், விராட் கோலி 9 ரன்களும், டி வில்லியர்ஸ் 15 ரன்களும், ஷிவம் டுபே 2 ரன்களும் எடுத்து இருந்தனர். தேவ்தத் படிக்கல் அதிரடியாக ஆடி 74 ரன்கள் எடுத்து ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு வலு சேர்த்தார்.

அதிரடித்த சூர்யகுமார் யாதவ். பெங்களூர் அணியை வீழ்த்திய மும்பை அணி!!

பெங்களூரு அணியானது 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் எடுத்தது. குர்கீரத் சிங் மான் 14 ரன்களுடனும், வாஷிங்டன் சுந்தர் 10 ரன்களுடனும் அவுட் ஆகாமல் களத்தில் இருந்தனர்.

அடுத்து, 165 ரன்கள் தேவை என்ற இலக்கினை நோக்கி மும்பை இந்தியன்ஸ் அணி சார்பில் துவக்க வீரர்களாக குவிண்டன் டிகாக் மற்றும் இஷான் கிஷன் களமிறங்கி ஆடினனர்.

டிகாக் 18 ரன்களும், 25 ரன்களும், திவாரி 5 ரன்களும் குர்னால் பாண்டியா 10 ரன்களும், ஹர்திக் பாண்டியா 17 ரன்களும் எடுத்து அவுட்டாகினர்.

சூர்யகுமார் அணிக்கு வலுசேர்க்கும் வகையில் அதிரடியாக ஆடினார்.

இறுதியில் மும்பை அணி 19.1 ஓவரில் 5 விக்கெட் எடுத்து 166 ரன்கள் எடுத்தது.

இதன்மூலம் மும்பை இந்தியன்ஸ் அணியை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

தாறுமாறாக ஆடிய 79 ரன்களுடன் சூர்யகுமார் யாதவ் அவுட் ஆகாமல் இருந்தார்.

Related posts

ஐபிஎல் போட்டி நடந்தால் பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்..!

TamilSportsNews

இதுக்குத்தான் வெயிட்டிங்க் பாஸ்… ஹேப்பியோ ஹேப்பி… குதூகலத்தில் ரசிகர்கள்!!

TamilSportsNews

மனைவியுடன் நவராத்திரி விழா கொண்டாட்டத்தில் சுரேஷ் ரெய்னா..!!

TamilSportsNews

Leave a Comment