Cricket

ஓய்வு பெறும்போது தோனி எனக்கு கொடுத்த சர்ப்ரைஸ்.. நினைவுகூர்ந்த கங்குலி!

 இந்திய கிரிக்கெட்டினைப் பொறுத்தவரை சச்சினுக்கு அடுத்து தனக்கென ஒரு இடத்தைப் பெற்றவர் சவுரவ் கங்குலி. இவரது கேப்டன்ஷிப்பில், இந்திய அணியின் பல வெற்றிகளுக்குக் காரணமாக இருந்தார்.

1992ம் ஆண்டு தனது கிரிக்கெட் வாழ்க்கையினைத் துவக்கிய கங்குலி, இவரது துவக்க காலங்கள் சொல்லிக்கொள்ளும்படியாக இல்லையென்றாலும், அதன்பின்னர் சிறந்த வீரராக தன்னை நிரூபித்தார். அவர் 2008 ஆம் ஆண்டு டெஸ்ட் தொடரோடு சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து விலகினார்.

ஓய்வு பெறும்போது தோனி எனக்கு கொடுத்த சர்ப்ரைஸ்.. நினைவுகூர்ந்த கங்குலி!

 2008 ஆம் ஆண்டு ஓய்வு பெறும்போது தோனி தனக்கு கொடுத்த சர்ப்ரைஸ் குறித்துக் கூறியுள்ளார். அதாவது கடைசிப் போட்டியின் கடைசி நாளில் கேப்டன் தோனி கங்குலியையே கேப்டனாக செயல்பட வேண்டுகோள் விடுத்தார்.

கங்குலி கூறுகையில், “கடைசிப் போட்டியின் இறுதி நாள் முழுவதும் என் ,மனதில் ஓய்வைப் பற்றிய சிந்தனைகளே ஓடியது, நான் படிக்கட்டுகளில் இறங்கும்போது, வீரர்கள் மரியாதை செலுத்தும் விதமாக நின்றனர். அப்போது கேப்டன் தோனி என்னிடம் கேப்டனாக செயல்பட வேண்டும் என்று கூறி இன்ப அதிர்ச்சி அளித்தார்.

அந்த போட்டியில் எங்களுடைய வெற்றி கூடுதல் மகிழ்ச்சியாய் அமைந்தது,  ஆனால் போட்டியின்போது என் மனதில் ஓய்வைப் பற்றியே சிந்தனையே ஓடிக் கொண்டு இருந்தது. போட்டியின்போது இறுதியில் நடந்த விஷயங்கள் எதுவும் எனக்குத் தெரியவில்லை’ என்று கூறியுள்ளார்.

Related posts

இங்கிலாந்து-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் ஆஷஸ் 3-வது டெஸ்ட் கிரிக்கெட்

TamilSportsNews

Dream11 இல் தோல்வியா இவரை ஃபாலோவ் பண்ணுங்க… 90% வெற்றிதான்

TamilSportsNews

வெறித்தனமாக ஆடிய இந்திய வீரர்கள்… மோசமாக ஆடிய ஆஸ்திரேலியா.. தொடரைக் கைப்பற்றிய இந்தியா!!

TamilSportsNews

Leave a Comment