Cricket

திடீரென்று வேகப்பந்து வீச்சாளராக மாறிய அஸ்வின்

இந்திய கிரிக்கெட் அணியின் சுழற் பந்து வீச்சாளர்களில் ஒருவர் தமிழகத்தை சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின். இவர்  டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் என்று இந்திய அணிக்காக விளையாடி அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தி உள்ளார்.

திடீரென்று வேகப்பந்து வீச்சாளராக மாறிய அஸ்வின்

          இந்த நிலையில் தற்போது இந்திய அணியின் டெஸ்ட் போட்டிகளுக்கான அணியில் மட்டும் இடம்பெற்று வருகிறார். தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியின் தலைவராக ரவிச்சந்திரன் அஸ்வின் உள்ளார்.

     அஸ்வின் பேட்டிங்கில் அதிரடியாக விளையாடி வரும் நிலையில் வித்தியாசமான பவுலிங் செய்து அசத்தி வருகின்றார். நேற்று நடைபெற்ற மதுரை அணிக்கு எதிராக திண்டுக்கல் அணி 30 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

         மதுரை அணிக்கு எதிரான போட்டியின் போதும் அஸ்வின் வேகப்பந்து வீசுவது போல பந்துவீசி அசத்தினார். அஸ்வினின் வித்தியாசமான பந்தால் கிரன் ஆகாஷ் என்ற பேட்ஸ்மேனை வீழ்த்தினார்.

         வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்கு இந்திய அணியில் அஸ்வின் சேர்க்கப்பட்டுள்ளார். அந்த தொடரின்போது அஸ்வின் இதுபோன்று பவுலிங் ஆக்‌ஷன் செய்தால் அவருக்கு பவுலிங் செய்ய தடை விதிக்க வாய்ப்பு உள்ளது.

Related posts

ரிஷாப் பண்ட் தனது இயல்பு நிலைக்கு திரும்ப வேண்டும்- விக்ரம் ரதோர்

TamilSportsNews

மீண்டும் இந்திய அணியின் பயிற்சியாளராகும் ரவி சாஸ்திரி..!

TamilSportsNews

ஒரே தொடர் 2 சாதனை… சாதனைகளின் நாயகனாக ரோகித்…

TamilSportsNews

Leave a Comment