Cricket

கோலியைவிட ஸ்டீவ் சுமித்தான் பெஸ்ட் பேட்ஸ்மேன்… பிரெட்லீ கருத்து!!

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக டோக்கியோ ஒலிம்பிக், டி 20 கிரிக்கெட் போட்டிகள் உட்பட எந்தவிதப் போட்டிகளும் நடைபெறவில்லை. இதனால் ஓய்வில் இருந்துவரும் வீரர்களும் சரி, முன்னாள் வீரர்களும் சரி வலைதளங்களில் அவ்வப்போது உரையாடி ரசிகர்களை குஷிப்படுத்தி வருகின்றனர்.

அந்தவகையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் பிரெட்லீ இன்ஸ்டாகிராம் உரையாடலில் கலந்து கொண்டுள்ளார். அப்போது அவர் பல விஷயங்களை நினைவு கூர்ந்தார்.

அவரிடம் விராட் கோலி, ஸ்டீவ் சுமித் இருவரில் சிறந்த பேட்ஸ்மேன் யார் என்று கேட்கப்பட்டது. பிரெட்லீ கூறும்போது, “உண்மையில் இவர்கள் இருவரும் மிகச் சிறப்பான வீரர்கள், ஒருவருக்கொருவர் நிகர் இல்லாமல் ஆடி வருகின்றனர்.

கோலியைவிட ஸ்டீவ் சுமித்தான் பெஸ்ட் பேட்ஸ்மேன்… பிரெட்லீ கருத்து!!

ஒப்பிடு செய்வதற்கான தகுதியும், திறமையும் சம அளவில் கொண்டவர்கள். கோலி பேட்டிங் டெக்னிக் மற்றும் ஷாட்டுகளுக்காகப் பெயர் பெற்றவர். ஸ்டீவன் சுமித்திடம் நான் கண்டு வியந்த விஷயம் ஓராண்டு தடை காலத்திற்குப் பின்னரும் அணிக்குத் திரும்பியதுடன், வேறு லெவலான ஆட்டத்தினை வெளிப்படுத்துவதுதான்.

இப்போதைய நிலையில் இவர்களது ஆட்டத்தினைக் கருத்தில் கொள்ளும்போது நான் ஸ்டீவன் சுமித் என்றே தேர்வு செய்வேன்.” என்று கூறியுள்ளார்.

கேப் டவுனில் நடைபெற்ற தென்ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான தொடரில் பந்தை சேதப்படுத்திய சர்ச்சையில் சிக்கிய ஸ்மித்திற்கு ஓராண்டு தடை விதிக்கப்பட்டது. தற்போது தடைக்காலம் முடிந்ததும்,  பல போட்டிகளில் மீண்டும் களம் புகுந்து கலக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களுக்கு நன்றி… ரோகித் சர்மா பேட்டி

TamilSportsNews

ரசிகர்களின் சந்தோஷத்தை விட வெற்றிதான் முக்கியம்… விமர்சனங்களுக்கு புஜாரா பதிலடி!!

TamilSportsNews

5 மாதங்களுக்குப் பின்னர் மனைவி மற்றும் மகனைப் பார்க்கும் பாகிஸ்தான் வீரர்!!

TamilSportsNews

Leave a Comment