Cricket

பல லட்சக்கணக்கிலான போதைப்பொருளுடன் பிடிபட்ட இலங்கை கிரிக்கெட் வீரர்!!

இலங்கை அணியின் முன்னாள் வீரர் ஒருவர் போதைப் பொருள் வைத்திருந்து போலீசாரால் கைது செய்யப்பட்ட விஷயம் இலங்கை ரசிகர்களிடையே பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கை அணியில் 2018 ஆம் ஆண்டு இலங்கை- வங்கதேச போட்டியின்போது  அறிமுகமானார் வேகப்பந்துவீச்சாளர் மதுசங்கா, இளம் வயதே ஆகியிருந்தாலும் அறிமுகப் போட்டியில் வங்கதேச அணிக்கு இவர் பயம் காட்டியதை யாராலும் மறக்க முடியாது.

வயது 25 வயதேயான மதுசங்கா இலங்கை அணி சார்பில் 1 ஒருநாள், 2 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். அதன்பின்னர் அணியில் விளையாட வாய்ப்பு கிடைக்காமல் தவித்து வந்தார்.

தற்போது கொரோனா தொற்று பரவாமல் தடுக்கும்பொருட்டு இலங்கையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் ஊரடங்கினைக் கண்காணிக்க அமைக்கப்பட்டிருந்த காவல் துறையினர் பன்னாலா பகுதியில் காரில் சென்றுகொண்டிருந்த மதுசங்காவை நிறுத்தி போலீசார் சோதனை மேற்கொண்டனர்.

பல லட்சக்கணக்கிலான போதைப்பொருளுடன் பிடிபட்ட இலங்கை கிரிக்கெட் வீரர்!!

அப்போது அவரது நண்பர்கள் போதைப் பொருள் உட்கொண்டிருப்பது தெரியவர, காரினை முழுமையாகப் பரிசோதித்துப் பார்த்தனர். அதில் காருக்குள் பல லட்சக்கணக்கிலான போதைப்பொருள்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

அதனையடுத்து முக்கிய காவல்நிலையத்திற்கு தகவல் சொன்ன காவல்துறையினர் காருக்குள் இருந்த போதைப்பொருளைப் பறிமுதல் செய்தனர்.

மேலும் மதுசங்காவையும், அவரது நண்பர்களையும் கைது செய்து சிறைக்காவலில் அடைத்தநிலையில், இரண்டு வாரம் நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டுள்ளது.

Related posts

இப்படியும் ஒரு பயிற்சியாளர்… வலுக்கும் கண்டனங்கள்!

TamilSportsNews

முதல் பகல்-இரவு டெஸ்ட்… வரலாற்று சாதனை செய்த இந்திய அணி!!

TamilSportsNews

ஸ்ரீகாந்த் சொன்ன கேலிக்கூத்தான கருத்து… இர்பான் பதான் சாடல்!!

TamilSportsNews

Leave a Comment