Cricket

நவம்பர் மாதத்திற்கு தள்ளிவைக்கப்பட்ட இலங்கை பிரிமீயர் லீக்!!

இலங்கை கிரிக்கெட் வாரியம் பிரிமியர் லீக் போட்டிகளை நடத்தலாம் என்று முடிவு எடுத்துள்ளதாக சமீபத்தில் தகவல்கள் வெளியாகின.

அதாவது இங்கிலாந்து, இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய போன்ற நாடுகளில் நடைபெறும்  கவுண்ட்டி லீக், ஐபிஎல் போட்டி மற்றும் பிக்பாஷ் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.இதன்மூலம் இந்த கிரிக்கெட் வாரியங்கள் பெரிய அளவில் பணத்தினை ஈட்டி வரும் நிலையில் இலங்கை கிரிக்கெட் வாரியம் நிதி நெருக்கடியினை சமாளிக்க இந்த வரவேற்புமிக்க முடிவினை எடுத்துள்ளதாக அதிகாரப்பூர்வமாகத் தகவல் வெளியாகியது.

அதாவது ஐந்து அணிகளுக்கு இடையே ஆகஸ்ட் 28 ஆம் தேதி போட்டியானது துவங்க உள்ளதாகத் தகவல் வெளியாகியது. மேலும் ஒவ்வொரு அணியும் 6 வெளிநாட்டு வீரர்களைப் பெற்றுக்கொள்ளலாம் என்றும் கூறப்பட்டு இருந்தது.

நவம்பர் மாதத்திற்கு தள்ளிவைக்கப்பட்ட இலங்கை பிரிமீயர் லீக்!!


இந்தநிலையில் இலங்கை பிரிமீயர் லீக் (எல்.பி.எல்.) நவம்பர் மாதம் தள்ளிவைக்கப்படுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது வெளிநாட்டு வீரர்களின் தனிமைப்படுத்தும் நாட்கள் குறைக்க இலங்கை சுகாதாரத்துறை அனுமதி வழங்கும் என்று இலங்கை கிரிக்கெட் வாரியம் நினைத்த நிலையில், 14 நாட்கள் தனிமைப்படுத்தல் கட்டாயம் என்று கூறப்பட்டுள்ளது.

இதனால் ஏற்பட்டுள்ள சிக்கல் காரணமாக இலங்கை பிரிமீயர் லீக்கினை நவம்பர் 20 ஆம் தேதி துவங்கி டிசம்பர் 12 ஆம் தேதி வரை நடைபெறும் என்று இலங்கை கிரிக்கெட் வாரிய துணைத் தலைவர் ரவின் விக்ரமரத்னே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

Related posts

சேப்பாக் சூப்பர் கில்லீஸ் – கோவை கிங்ஸ் அணி இன்று மோதல்

TamilSportsNews

எங்களுக்கு இதுலாம் ஜுஜுபி… பந்தாடிய ஆஸ்திரேலியா!!

TamilSportsNews

டஃப் கொடுத்த வெஸ்ட் இண்டீஸ் அணி.. தெறிக்கவிட்ட விராட் கோலி…!!

TamilSportsNews

Leave a Comment