Tennis

அமெரிக்க ஓபனில் இருந்து விலகுவதாக ஸ்பெயினின் ரபெல் நடால் அறிவிப்பு!!

கொரோனா அச்சுறுத்தலால் உலகம் முழுவதும் 200 நாடுகளில் கட்டுப்படுத்தப்பட்ட ஊரடங்கானது அமலில் உள்ளது. இதனால் டோக்கியோ ஒலிம்பிக், டி 20 உலகக் கோப்பை உட்பட எந்தப் போட்டிகளும் நடைபெறவில்லை.

தற்போது பெரிய அளவிலான நஷ்டம் ஏற்படாமல் தடுக்கும் பொருட்டு, விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.  அந்தவகையில் கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க்கில் ஆகஸ்ட் 31 ஆம் தேதி துவங்கி செப்டம்பர் 13 ஆம் தேதி வரை நடக்கிறது.

கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் இந்த போட்டியானது உயிர் பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி நடத்தப்படுகிறது. ஆனால் அதிர்ச்சியளிக்கும் விதமாக அமெரிக்க ஓபனில் இருந்து விலகுவதாக ஸ்பெயினின் ரபெல் நடால் அறிவித்துள்ளார்.

அமெரிக்க ஓபனில் இருந்து விலகுவதாக ஸ்பெயினின் ரபெல் நடால் அறிவிப்பு!!

நடால் ட்விட்டரில், “உலகம் முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பானது நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. தற்போது வரை மருத்துவர்கள், செவிலியர்கள் என அனைவரும் போராடி வருகின்றனர். இருப்பினும் நிலைமை கட்டுக்குள் வந்த பாடில்லை.

நான் போட்டியில் பங்குபெறுவது குறித்து குடும்ப உறுப்பினர்களிடம் ஆலோசனை செய்தேன், அவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு நான் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகும். இதனால் எனக்கு வேற ஆப்ஷன் இல்லாத படசத்தில் அமெரிக்க ஓபனில் இருந்து விலகுவதாக முடிவு எடுத்தேன்.

மனது சொல்வதை கேட்டு இந்த முடிவினை எடுத்துள்ளதால் வருத்தம் இல்லை, இல்லையேல் குழப்பத்துடன் ஈடுபாடு இல்லாமல் ஒரு மனதாக விளையாட வேண்டி வரும்” என்று கூறியுள்ளார்.

Related posts

உடலளவில் தளர்வுறும்போது நானே முன்வந்து ஓய்வினை அறிவிப்பேன்.. பெடரர் பேச்சு!!

TamilSportsNews

லண்டனில் இன்று தொடங்கும் விம்பிள்டன் டென்னிஸ் போட்டி

TamilSportsNews

விம்பிள்டன் டென்னிஸில் கால் இறுதிக்கு முன்னேறிய செரினா

TamilSportsNews

Leave a Comment