Cricket

2 பேட்ஸ்மேன்களுக்கு ஹெல்மெட்டில் அடி… இப்படியும் ஒரு வெறித்தனமா ஷமிக்கு!!

வங்கதேச அணிக்கு எதிராக நடைபெற்ற பகல்- இரவு டெஸ்ட் போட்டியானது நேற்று கொல்கத்தாவில் தொடங்கியது. மிகவும் பிரமாண்டமாக துவங்கிய இந்த ஆட்டத்தில் வங்காளதேச அணி டாஸ் வென்றது.

அதன்படி பேட்டிங்கை தேர்வு செய்தது, இதனால் இந்திய அணியினை பந்து வீசும்படி பணித்தது. வங்கதேச அணி இந்திய பந்து வீச்சாளர்களின் பந்துகளை சமாளிக்க முடியாமல் திணறியது.

2 பேட்ஸ்மேன்களுக்கு ஹெல்மெட்டில் அடி… இப்படியும் ஒரு வெறித்தனமா ஷமிக்கு!!

வங்கதேச அணியின் லிட்டன் தாஸ் பேட்டிங் செய்தபோது ஷமி அதிரடியாக பந்து வீசினார். வெறித்தனமாக ஆடிய ஷமி போட்ட 3 வது பந்து லிட்டன் தாஸின் ஹெல்மெட்டைத் தாக்கியது.

மருத்துவ பரிசோதனைக்கு சென்ற அவர், ஒண்ணும் பிரச்சினை இல்லை என்று கூறி விளையாட வந்தார். அதன்பின்னர் ஆடத் துவங்கிய லிட்டன் இரண்டு ஓவர்கள் மட்டுமே ஆடினார்.

 அதன்பின்னர் தலையில் வலி ஏற்பட்டதை தொடர்ந்து ரிட்டயர்டு ஹர்ட் முறையில் வெளியேறினார். அதன்பின்னர் ஆட்டம் தொடர்ந்து நடைபெற்றது, அடுத்து நயீம் களம் இறங்கினார்.

ஷமி அடுத்து வீசிய மூன்றாவது பந்திலேயே நயீம் ஹெல்மட்டில் தாக்கப்பட்டார். அவர் பிரச்சினை ஏதும் இல்லை என்பதுபோல் கடைசிவரை ஆடினார்.

ஆனால் அதன்பின்னர் இந்திய அணிக்கு எதிராக அவர்  பீல்டிங் செய்யவில்லை. அவருக்கு தலையில் வலி ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

ஷமி வெறித்தனமா ஆடுறது ஓ.கே. அதுக்கு இப்படியா ஆடுவாங்க? என்று ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

Related posts

இந்தியாவை ஜெயிக்கறது சாதாரண விஷயமல்ல… சீனியர் வீரர்கள் சப்போர்ட் பண்ணுங்க.. குசால் பெரேரா வேண்டுகோள்!!

TamilSportsNews

பெண்கள்குறித்த சர்ச்சைகள் எங்கள் காலத்தில் கிடையாது—- உண்மையைப் போட்டுடைத்த யுவராஜ்சிங்!!

TamilSportsNews

எனக்கு டெஸ்ட் கிரிக்கெட்டுதான் பிடிக்கும்… ரசிகருக்கு பதில் சொன்ன விராட் கோலி

TamilSportsNews

Leave a Comment