Cricket

கோலியின் உடற்பயிற்சியினைக் கண்டு வெட்கமடைந்தேன்.. தமிம் இக்பால் பேட்டி!!

வங்காளதேச- ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான போட்டிக்குப் பின்னர் மோர்தசா கேப்டன் பதவியினை ராஜினாமா செய்வதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அதன்பின்னர் வங்காளதேச அணியின் ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டனாக தமிம் இக்பால் நியமிக்கப்பட்டார்.

தற்போது கொரோனா லாக்டவுனால் போட்டிகள் எதுவும் பெரிதாக நடைபெறாத நிலையில் விளையாட்டு வீரர்கள் இணையதளங்களில் பேட்டி கொடுத்து வருகின்றனர். அந்தவகையில் வங்கதேச ஒரு நாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் தமிம் இக்பால் இணைய தள நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார்.

கோலியின் உடற்பயிற்சியினைக் கண்டு வெட்கமடைந்தேன்.. தமிம் இக்பால் பேட்டி!!

அப்போது அவர் பேசுகையில், “2 வருடங்களுக்கு முன்னர் ஒருநாள் விராட்கோலி உடற்பயிற்சி செய்வதை பார்த்தேன், உண்மையில் எனக்கு அது ஷாக்காகவே இருந்தது. ஏனெனில் நான் அந்தளவு உடற்பயிற்சி என்றுமே செய்ததில்லை என வெட்கமடைந்தேன். உண்மையில் அந்த அளவு பயிற்சிகள் செய்திருந்தால் என் உடல் கட்டுக்கோப்பாக வேறு லெவலாக இருந்திருக்கும்.

இந்தியா அண்டை நாடு என்பதால், அங்கு அவர்கள் செய்யும் விஷயங்கள் எங்கள் நாட்டிலும் எதிரொலிக்கும்.  பெரும்பாலும் இந்தியாவில் பின்பற்றப்படும் நடைமுறைகளை நாங்கள் பின்பற்றுவோம்.

உடல் தகுதி குறித்த இந்தியாவின் அணுகுமுறை மாறியபோது, அது வங்காளதேசத்திலும் மாறியது. வங்கதேச அணியில் முஷ்பிகுர் ரஹிம் உடற்பயிற்சிகள் மிகவும் சிறப்பாக செய்யக்கூடியவர்” என்று தெரிவித்துள்ளார்.

Related posts

சிஎஸ்கேக்கா விளையாடுறது ஹேப்பியாக இருக்கு… பூரிப்பில் பியூஸ் சாவ்லா!!

TamilSportsNews

அந்தரத்தில் பறக்கும் வார்னர்.. மேஜிக்கை பாருங்க!!

TamilSportsNews

வெஸ்ட் இண்டீஸ் – இந்தியா இடையிலான ஒரு நாள் தொடரின் கடைசி ஆட்டம்

TamilSportsNews

Leave a Comment