இலங்கை கிரிக்கெட் வாரியம் பிரிமியர் லீக் போட்டிகளை நவம்பர் 26 ஆம் தேதி நடத்த முடிவு எடுத்துள்ளதாக சமீபத்தில் தகவல்கள் வெளியாகின.
அதாவது இங்கிலாந்து, இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய போன்ற நாடுகளில் நடைபெறும் கவுண்ட்டி லீக், ஐபிஎல் போட்டி மற்றும் பிக்பாஷ் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
இதனைப் போல் இலங்கை கிரிக்கெட் வாரியமும் பிரீமியர் லீக் போட்டியினை ஐந்து அணிகளுக்கு இடையே ஆகஸ்ட் 28 ஆம் தேதி துவங்க உள்ளதாகத் தகவல் வெளியாகியது. மேலும் ஒவ்வொரு அணியும் 6 வெளிநாட்டு வீரர்களைப் பெற்றுக்கொள்ளலாம் என்றும் கூறப்பட்டு இருந்தது.

இந்தநிலையில் வெளிநாட்டு வீரர்களின் தனிமைப்படுத்தும் நாட்கள் குறைக்க இலங்கை சுகாதாரத்துறை அனுமதி வழங்கும் என்று இலங்கை கிரிக்கெட் வாரியம் நினைத்த நிலையில், 14 நாட்கள் தனிமைப்படுத்தல் கட்டாயம் என்று கூறப்பட தள்ளி வைக்கப்பட்டது.
அதன்பின்னர் தற்போது ஒருவழியாக இலங்கை பிரிமீயர் லீக் நவம்பர் 26 ஆம் தேதி துவங்கவுள்ள நிலையில் அதில் விளையாடும் அணிகளில் ஒன்றான காலே கிளாடியேட்டர்ஸ் அணி கேப்டன் சர்பராஸ் அகமது நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் விளையாடும் பொருட்டு இலங்கை பிரிமீயர் லீக்கில் இருந்து விலகியுள்ளார்.
இதனால் காலே கிளாடியேட்டர்ஸ் அணியில் சர்பராஸ் அகமதுக்கு பதிலாக ஷாகித் அப்ரிடி அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.