Tennis

10 ஆயிரம் வாக்குகளுடன் இதயம் கவர்ந்த வீராங்கனை அவார்டு வென்ற சானியா மிர்சா..!!

சானியா மிர்சாவுக்கு 2018 ஆம் ஆண்டு ஆண் குழந்தை பிறந்தது. ஓய்வில் இருந்த சானியா மிர்சா கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஹோபர்ட் சர்வதேச டென்னிஸ் போட்டி மூலம் ரீ எண்ட்ரி கொடுத்து விளையாடி வருகிறார்.

பெண்களுக்கான பெட் கோப்பை டென்னிஸ் போட்டியில் சிறப்பாக செயல்படும் வீராங்கனைகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஹார்ட் அவார்டு வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு ஆசிய-ஓசியானா மண்டலத்தில் இருந்து சானியா மிர்சா மற்றும் பிரிஸ்கா நுக்ரோகோ இருவரும் நாமினேட் செய்யப்பட்டனர்.

இந்த விருதுக்கான ஆன்லைன் வாக்கெடுப்பில், சானியா மிர்சா  அதிக வாக்குகள் பெற்று ஹார்ட் அவார்டுக்கு தேர்வாகியுள்ளார்..

10 ஆயிரம் வாக்குகளுடன் இதயம் கவர்ந்த வீராங்கனை அவார்டு வென்ற சானியா மிர்சா..!!

தன்னார்வலர்கள் சிலருடன் இணைந்து கொரோனாவுக்கு எதிரான பிரதமர் நிவாரண நிதிக்கு 1.25 கோடி ரூபாய் நிதி திரட்டியுள்ள இவர், சாலையோரத்தில் வசிக்கும் மனிதர்கள், முதியோர்கள், ஏழைகள், தினக்கூலிகள் என இதுவரை 10 ஆயிரம் பேருக்கு உணவு அளித்துள்ளதாக ட்விட்டரில் பதிவிட்டு இருந்தார்.

தற்போது இந்த விருதின் மூலம் கிடைக்கும் ரூ.1.½ லட்சம் பரிசுத்தொகையையும் கொரோனா நிவாரண நிதிக்கு வழங்க உள்ளதாக கூறியுள்ளார். மேலும் தன்னுடைய ரசிகர்கள் நன்றி தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். ஹார்ட் அவார்டு பெறும் முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்ற சானியாவுக்கு விளையாட்டு வீரர்கள், ரசிகர்கள், பிரபலங்கள் எனப் பலரும் தங்களது வாழ்த்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

Related posts

10,000 பேருக்கு இலவச உணவு… ரூ. 1.25 கோடி நிதி… களப் பணியில் சானியா மிர்சா

TamilSportsNews

விம்பிள்டன் டென்னிஸ்: பெடரரை வீழ்த்திய ஜோகோவிச்

TamilSportsNews

ஆண்கள் மற்றும் மகளிர் டென்னிஸ் சங்கங்கள் ஒன்றிணைய வேண்டும்… ரோஜர் ஃபெடரர் சொல்லும் ஐடியா!!

TamilSportsNews

Leave a Comment