Tennis

வீடியோ கான்பரன்ஸ் மூலம் தனது ஆதங்கத்தைக் கொட்டித் தீர்த்த சானியா மிர்சா!!

இந்தியாவிற்காக டென்னிஸில் அதிக அளவிலான ஆட்டங்களை ஆடி ஜெயித்தவர் சானியா மிர்சா. அவர் டென்னிஸிலிருந்து விடைபெற்று, பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக்கை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தையும் உள்ளது.

உலகக்கோப்பையின்போது இவர் கணவருடன் இங்கிலாந்து செல்ல, அது பெரும் சர்ச்சையாகிப் போனது. அப்போதே டிவிட்டர் மூலம் பலருக்கு பதில் கொடுத்து இருந்தார். 

இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி வீராங்கனைகளுடன் ஜெமிமா ரோட்ரிக்ஸ், மந்தனா ஆகியோருடன் வீடியோ கான்பரன்ஸ் மூலம் பேசியுள்ளார். அப்போது சானியா தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியதாவது, “சமீபத்தில் உலக கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய அணி வீராங்கனை அலிசா ஹீலியின் ஆட்டத்தை பார்க்க அவரது கணவரான ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளருமான மிட்செல் ஸ்டார்க் சென்று பார்த்தார். உண்மையில் அது சிறப்பான விஷயமாக பாராட்டப்பட்டது.

வீடியோ கான்பரன்ஸ் மூலம் தனது ஆதங்கத்தைக் கொட்டித் தீர்த்த சானியா மிர்சா!!

ஆனால் அதேபோன்ற விஷயங்கள் இங்கு எங்கேனும் நடந்து இருந்தால் அதனை வித்தியாசமாக பெயரிட்டு கூறி இருப்பார்கள்.

விளையாட்டுவீரர்களின் கவனச்சிதறலுக்கு அவர்களது மனைவியை காரணம் சொல்வதை நான் ஒப்புக்கொள்ள மாட்டேன், இதை தவறான விஷயமாக பார்க்கிறேன், மனைவிகள் பெரும்பாலும் வீரர்களுக்கு ஆதரவு அளித்து நெருக்கடியான சூழ்நிலையிலும் ஊக்கமளிக்கவே செய்வர்.

அவரவர் தோல்விக்கு அவரவரே காரணம், பெண்களை எப்போதும் ஏன் ஒரு கவனச்சிதறலாக நினைக்கிறார்கள் என்பது மட்டும் புரியவில்லை. இது அனைவரும் புரிந்துகொள்ள வேண்டிய ஒரு உளவியல் பிரச்சினையாகும்.” என்று கூறியுள்ளார்.

Related posts

தாறுமாறு பண்ணிட்டாரு.. இறுதிப் போட்டிக்குள் ரபேல் நடால்!

TamilSportsNews

டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டி: தமிழக வீரர்கள் பிரஜ்னேஷ் குணேஸ்வரன், ராம்குமாருக்கு வாய்ப்பு

TamilSportsNews

அரை இறுதியில் வெளியேறிய பெடரர்… நடாலுக்கும் வாய்ப்பு பறிபோச்சு!!

TamilSportsNews

Leave a Comment