Cricket

பென் ஸ்டோக்ஸ் மனைவி தரக்குறைவாகப் பேசிய சாமுவேல்ஸ்.. வலுக்கும் கண்டனங்கள்!!

இங்கிலாந்து வீர்ர் பென் ஸ்டோக்ஸ் வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஆல் ரவுண்டர் சாமுவேல்ஸ் இவர்களது சண்டையானது இந்தியா பாகிஸ்தான் சண்டையைக் காட்டிலும் பெரும் சண்டையாக இருந்து வருகின்றது. இங்கிலாந்து வெஸ்ட் இண்டீஸ் போட்டி ரசிகர்கள் ரன்கள், விக்கெட்டுகளைவிட இவர்களது சண்டையினையே ரசிக்கத் துவங்கினர்.

இவர்களது சண்டை இப்போது ஆரம்பித்தது கிடையாது ஏறக்குறைய 5 ஆண்டுகளுக்கு முன்னர் அதாவது 2015 ஆம் ஆண்டு இங்கிலாந்து அணி வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடியது.

அப்போது அந்த டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பென் ஸ்டோக்ஸ் அவுட் க, சாமுவேல்ஸ் சல்யூட் அடித்துக் கொண்டாடினார். இதுதாங்க இப்போ நடக்குற அந்த சண்டைகளுக்குக் காரணம், சண்டைக்கு பிள்ளையார் சுழியைப் போட்டார் சாமுவேல்ஸ்.

பென் ஸ்டோக்ஸ் மனைவி தரக்குறைவாகப் பேசிய சாமுவேல்ஸ்.. வலுக்கும் கண்டனங்கள்!!

அதன்பின்னர் டி20 உலகக் கோப்பை போட்டியில் இவர்களது இந்த சண்டையானது அடுத்தகட்டத்தை நோக்கிப் பயணித்தது. இவர்கள் இருவரும் மாறி மாறி குறை கூறுவதும் சண்டை இடுவதும் என இருந்து வருகின்றனர்.

இந்த நிலையில் பென் ஸ்டோக்ஸ் மனைவி குறித்து சாமுவேல்ஸ் பேசி கடும் கண்டனத்திற்கு ஆளாகியுள்ளார்.

சாமுவேல்ஸ் கூறுகையில், ‘‘எந்த ஒரு வெள்ளையனாலும் என்னைப் போட்டியில் இருந்து வெளியேற்ற முடியாது, உன் மனைவியை என்னுடன் 14 நாட்கள் அனுப்பி வைத்தால் போதும், அவள் 14 நொடிக்குள் ஜமைக்காவிற்கு திரும்புவாள்.” என்று கூறியுள்ளார்.

சாமுவேல்ஸின் இந்தப் பேச்சு ரசிகர்கள் மத்தியிலும் சரி கிரிக்கெட் வீரர்கள் மத்தியிலும் கடும் கண்டனத்திற்கு ஆளாகியுள்ளது.

Related posts

இந்தியா- ஆஸ்திரேலியா தொடருக்கான இந்திய அணி விவரங்கள் வெளியானது!!

TamilSportsNews

ஐபிஎல் பரிசுத்தொகை பாதியாக குறைப்பு… பிசிசிஐ அறிவிப்பு.. வீரர்கள் அதிருப்தி…

TamilSportsNews

அம்மா தாயி, எங்கம்மா இருந்த இவ்ளோ நாள்… கோப்பை போச்சே… மண்ணைக் கவ்விய இந்தியா!!!

TamilSportsNews

Leave a Comment