Cricket

சாஹாவின் ஆட்டம் நம்ப முடியதாக வகையில் இருந்தது.. புகழ்ந்து தள்ளிய வார்னர்!!

துபாயில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியின் இரண்டு தினங்களுக்கு முந்தைய லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் களம் கண்டன. இந்த லீக் ஆட்டத்தில் டெல்லி அணி டாஸ் வென்றது, அதன்மூலம் பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதனால் பேட்டிங்க் செய்ய சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி சார்பில் டேவிட் வார்னர் மற்றும் விருத்திமான் சாஹா துவக்க வீரர்களாக களம் இறங்கினர்.

துவக்க ஜோடி அணியை வெற்றியினை நோக்கி சிறப்பாக இட்டுச் சென்றது,  டேவிட் வார்னர் மற்றும் விருத்திமான் சாஹா கூட்டணியைப் பிரிக்க டெல்லி கேப்பிடல்ஸ் அணி பந்துவீச்சாளர்கள் கடுமையாகப் போராடிய நிலையில் வார்னர் 66 ரன்களில் அவுட் ஆகினார்.

சாஹாவின் ஆட்டம் நம்ப முடியதாக வகையில் இருந்தது.. புகழ்ந்து தள்ளிய வார்னர்!!

சாஹா அதிரடிக்கு குறைவில்லாமல் 87 ரன்கள் எடுத்து அவுட் ஆக, சன்ரைசர்ஸ் ஐதராபாத் 20 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 219 ரன்கள் எடுத்தது.

இதுகுறித்து வார்னர் கூறுகையில், “துவக்க வீரராக விருத்திமான்  சாஹா களம் இறங்கி அணிக்கு வலு சேர்க்கும் வகையிலான துவக்கத்தைக் கொடுத்தார், அவரை கட்டுப்படுத்த முடியாத அளவிலான பிரமாதமான ஆட்டத்தைக் கொடுத்தார்.

உண்மையில் அவரது ஆட்டம் வியக்கத்தக்கதாக இருந்தது. உண்மையில் அது அணியின் வெற்றிக்கு உதவியாக இருந்தது என்பதில் சந்தேகமில்லை” என்று கூறியுள்ளார்.

Related posts

கோலி தலைமையிலான அணி இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் மிகச்சிறந்த அணி… கவாஸ்கர் பாராட்டு!!

TamilSportsNews

விளையாடத் தயங்கும் இலங்கை வீரர்கள்.. பாகிஸ்தான் சொன்ன அதிரடி யோசனை!!

TamilSportsNews

காயத்திலிருந்து மீண்ட ஹர்திக் பாண்டியா… அசந்துபோன ரசிகர்கள்!

TamilSportsNews

Leave a Comment