Tennis

அமெரிக்க ஓப்பன் டென்னீஸில் இருந்து விலகும் ரஷிய வீராங்கனை ஸ்வெட்லனா குஸ்னெட்சோவா!!

கொரோனா அச்சுறுத்தலால் உலகம் முழுவதும் 200 நாடுகளில் கட்டுப்படுத்தப்பட்ட ஊரடங்கானது அமலில் உள்ளது. இதனால் டோக்கியோ ஒலிம்பிக், டி 20 உலகக் கோப்பை உட்பட எந்தப் போட்டிகளும் நடைபெறவில்லை.

தற்போது பெரிய அளவிலான நஷ்டம் ஏற்படாமல் தடுக்கும் பொருட்டு, விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.  அந்தவகையில் கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க்கில் ஆகஸ்ட் 31 ஆம் தேதி துவங்கி செப்டம்பர் 13 ஆம் தேதி வரை நடக்கிறது.

அமெரிக்க ஓப்பன் டென்னீஸில் இருந்து விலகும் ரஷிய வீராங்கனை ஸ்வெட்லனா குஸ்னெட்சோவா!!

கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் இந்த போட்டியானது உயிர் பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி நடத்தப்படுகிறது. ஆனால் அதிர்ச்சியளிக்கும் விதமாக அமெரிக்க ஓபனில் இருந்து விலகுவதாக ரஷிய வீராங்கனை ஸ்வெட்லனா குஸ்னெட்சோவா  அறிவித்துள்ளார்.

சமீபத்தில் ஸ்பெயினின் ரபெல் நடால் மற்றும் வீராங்கனை ஆஷ்லி பார்டி ஆகியோரும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்து அதிர்ச்சி அளித்தனர்.

ரஷிய வீராங்கனை ஸ்வெட்லனா குஸ்னெட்சோவா 2004 ஆம் ஆண்டு அமெரிக்க ஓப்பன் டென்னீஸ் போட்டியில் சாம்பியன் சாம்பியன் பட்டம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

லண்டனில் இன்று தொடங்கும் விம்பிள்டன் டென்னிஸ் போட்டி

TamilSportsNews

அகல் விளக்கு ஏற்றி நமது ஒற்றுமை வெளிப்படுத்துவோம்.. டேபிள் டென்னிஸ் வீரர் ஹர்மீத் வேண்டுகோள்!!

TamilSportsNews

போராடிய சாண்ட்ரென்… அரை இறுதிக்குள் நுழைந்த ரோஜர் பெடரர்

TamilSportsNews

Leave a Comment