Cricket

ஐபிஎல் நடக்கலனா 2000 கோடி நஷ்டம் ஏற்படும்… வெளியான அதிர்ச்சிகரமான தகவல்!!

13 வது ஐ.பி.எல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மார்ச் 29 ஆம் தேதி நடைபெற இருந்தது. உலக அளவில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை அதிகமானதைத் தொடர்ந்து, ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரை ஏப்ரல் 15 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பதாக பிசிசிஐ மற்றும் ஐசிசி அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

இந்தநிலையில் 2020 ஆம் ஆண்டுக்கான ஐ.பி.எல். போட்டி நடைபெறுவதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவே என்று கூறப்பட்டு வந்தது, இருப்பினும் வீரர்கள் பலரும் போட்டி நடைபெற்றால் சிறப்பாக பங்கேற்க வேண்டும் என்ற முறையில் பயிற்சி செய்தும் வருகின்றனர்.

ஐபிஎல் நடக்கலனா 2000 கோடி நஷ்டம் ஏற்படும்… வெளியான அதிர்ச்சிகரமான தகவல்!!

ஒருவேளை ஐபிஎல் போட்டியானது ரத்து செய்யப்பட்டால் இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு ஏறக்குறைய 2000 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படும் என்று கூறப்படுகிறது.

பொதுவாக ஐபிஎல் தொகையில் 150 கோடி ரூபாய் சர்வதேச கிரிக்கெட் வீரர்களுக்கும், 70 கோடி ரூபாய் உள்ளூர் கிரிக்கெட் வீரர்களுக்கும் வழங்கிவரும் நிலையில், ஐபிஎல் தொடர் ரத்து செய்யப்பட்டால், பிசிசிஐ வீரர்களுக்கு சம்பளம் வழங்குவது கடினமே என்றும் கூறப்படுகிறது.

ஏனெனில் பிசிசிஐ வருமானத்தைவிட், வீரர்களின் சம்பளம் கூடுதலாக இருப்பதேயாகும். இதுபோன்று நஷ்டத்தினைக் கணக்கில் கொண்டு இந்தியாவில் ஐபிஎல் போட்டியானது உலகக் கோப்பைக்குப் பின்னர் நவம்பரில் நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது.

Related posts

டஃப் கொடுத்த வெஸ்ட் இண்டீஸ் அணி.. தெறிக்கவிட்ட விராட் கோலி…!!

TamilSportsNews

போலீசாருக்கு வைட்டமின் சி மாத்திரைகளை வழங்கிய இர்பான் பதான் மற்றும் யூசுப் பதான்!!

TamilSportsNews

மீண்டும் களமிறங்கும் தோனி… ரசிகர்கள் குதூகலம்!!!

TamilSportsNews

Leave a Comment