Cricket

இந்திய அணி வீரர்களுடன் இணைந்த ரோகித் சர்மா… உற்சாகத்தில் ரசிகர்கள்!!

ஐபிஎல் போட்டிக்குப் பின்னர் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் காயம் காரணமாக ரோகித் சர்மா இடம்பெறவில்லை.

உடல் தகுதியினை மேம்படுத்தும் பொருட்டு ரோகித் சர்மா பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் உடல்தகுதியை நிரூபிக்கும் பயிற்சியை நவம்பர் 20 ஆம் தேதி  பயிற்சியினைத் தொடங்கினார்.

இந்தநிலையில் 10 நாட்கள் பயிற்சியினை வெற்றிகரமாக முடித்த ரோகித் சர்மா காயத்தில் இருந்து மீண்டு, உடல் தகுதியினை நிரூபித்து ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் பங்கேற்கும் பொருட்டு ஆஸ்திரேலியா சுற்றுப் பயணம் மேற்கொண்டார்.

இந்திய அணி வீரர்களுடன் இணைந்த ரோகித் சர்மா… உற்சாகத்தில் ரசிகர்கள்!!

டிசம்பர் 16 ஆம் தேதி ஆஸ்திரேலியா சென்றடைந்த அவர் 14 நாட்கள் தனிமைப்படுத்துதலில்  இருந்தார். அதன்பின்னர் 14 நாட்கள் முடிவடைந்த நிலையில் இன்று மெல்போர்னில் இந்திய அணி வீரர்களுடன் இணைந்துள்ளார்.

ரோகித் சர்மா இந்திய அணி வீரர்களைச் சந்தித்து சக வீரர்களை கட்டிப்பிடித்து மகிழ்ச்சி பொங்க இருக்கும் வீடியோவினை இந்திய கிரிக்கெட் வாரியம் அதன் வலைதளத்தில் வெளியிட்டுள்ளது, சக வீரர்கள் மட்டுமின்றி இந்திய அணியின் பயிற்சியாளர் ரவிசாஸ்திரியும் ரோகித் சர்மாவை மகிழ்ச்சி பொங்க வரவேற்றுள்ளார்.

ரோகித் சர்மா இந்திய அணியில் இணைந்தது குறித்த வீடியோவினை கிரிக்கெட் ரசிகர்கள் வைரலாக்கியதுடன், 3 வது டெஸ்ட் போட்டியினைக் காண ஆவலாக இருந்து வருகின்றனர்.

Related posts

கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா வீட்டில் தாக்குதல் நடத்தி கொள்ளை சம்பவம்.. ஒருவர் உயிரிழப்பு!!

TamilSportsNews

பண்ணை வீட்டில் மகள் ஸிவாவுடன் பைக்கில் சுற்றிவரும் தோனி… சிஎஸ்கே வெளியிட்ட வீடியோ!!

TamilSportsNews

ஷசாங்க் மனோகரின் பதவிக்காலம் முடிந்தது எங்களுக்கு ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கு… பிசிசிஐ முன்னாள் தலைவர் கருத்து!!

TamilSportsNews

Leave a Comment