Tennis

ஆஸ்திரேலியா ஓபன் டென்னீஸ் போட்டியில் இருந்து விலகிய ரோஜர் பெடரர்!!

கிரிக்கெட், கால்பந்து போன்று அதிக அளவிலான ரசிகர்களைக் கொண்ட ஒரு போட்டியானது டென்னீஸ் போட்டியாகும். ஒவ்வொரு ஆண்டும் ஆஸ்திரேலிய ஓப்பன் டென்னீஸ், விம்பிள்டன் டென்னீஸ், பிரெஞ்ச் ஓபன் டென்னீஸ், அமெரிக்க ஓபன் டென்னீஸ் என நான்கு வகையான டென்னிஸ் தொடர் போட்டியானது கிராண்ட் ஸ்லாம் அந்தஸ்து பெற்ற போட்டிகளாக நடைபெறும்.

இந்த கிராண்ட் ஸ்லாம் அந்தஸ்து பெற்ற போட்டிகளில் முதல் போட்டியாக ஆஸ்திரேலியா ஓபன் டென்னீஸ் போட்டியானது ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 18 ஆம் தேதி துவங்குவது வழக்கம்.

ஆஸ்திரேலியா ஓபன் டென்னீஸ் போட்டியில் இருந்து விலகிய ரோஜர் பெடரர்!!

ஆனால் இந்த ஆண்டு கொரோனாத் தொற்று அச்சுறுத்தல் காரணமாக 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற இருந்த ஆஸ்திரேலியா ஓபன் போட்டியானது பிப்ரவரி மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது.

பிப்ரவரி 8 ஆம் தேதி துவங்கவுள்ள இந்தப் போட்டியின் தகுதிச் சுற்று போட்டிகள் தோகாவில் நடைபெறும் என்றும் கூறப்பட்டது.

இந்தநிலையில் டென்னிஸ் வீரர் ரோஜர் பெடரர்  ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் போட்டியில் இருந்து காயம் காரணமாக விலகியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

அதாவது பெடரர் காயம் காரணமாக அறுவை சிகிச்சை செய்து தற்போது ஓய்வில் இருந்து வருகிறார். உடல் தகுதியை எட்டததால் அவர் இந்த முடிவினை எடுத்துள்ளார். 2000 ஆம் ஆண்டு முதல் 19 ஆண்டுகளாக விளையாடிவரும் பெடரரின் இந்த விலகல் அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக இருக்கும் என்று தெரிகின்றது.

Related posts

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் மழையால் பாதிப்பு

TamilSportsNews

அமெரிக்க ஓபன் டென்னிஸ்- இறுதிச் சுற்றில் தோல்வியுற்ற செரீனா!

TamilSportsNews

காமன்வெல்த் டேபிள் டென்னிஸில் இந்தியா சாம்பியன்

TamilSportsNews

Leave a Comment