Cricket

ரகானேவின் 6 மணி நேரப் போராட்டம்தான் ஆட்டத்தின் திருப்புமுனை.. இந்திய அணிப் பயிற்சியாளர் பாராட்டு!!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டியானது அடிலெய்டில் சமீபத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியின் 3 வது நாள் ஆட்டத்தில் இந்திய அணி தடுமாறிப் போனதுடன் 9 விக்கெட்டுகள் இழப்புடன் 36 ரன்கள் எடுத்து இருந்தது.

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் கடுப்பாகியதுடன் இந்திய அணி வீரர்கள்மீது கடுமையான விமர்சனங்களை முன் வைத்தனர்.

இந்தநிலையில் 2 வது டெஸ்ட் போட்டியில் பதிலடி கொடுக்க வேண்டும் என்ற நோக்கில்  விளையாடிய நிலையில், இந்திய அணி ஆஸ்திரேலியா அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த டெஸ்ட் போட்டியில் விராட் கோலி அவரது மனைவியின் பிரசவம் காரணமாக பங்கேற்கவில்லை, அதேபோல் ரோகித் சர்மாவும் காயம் காரணமாக பங்கேற்கவில்லை.

ரகானே 6 மணி நேரப் போராட்டம்தான் ஆட்டத்தின் திருப்புமுனை.. இந்திய அணிப் பயிற்சியாளர் பாராட்டு!!

ரகானே தற்காலிக பொறுப்பு கேப்டனாக நியமிக்கப்பட்ட நிலையில் பலரும் இந்திய அணியின் நிலைகுறித்து வருத்தத்தில் இருந்தனர். ஆனால் அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ரகானே சதம் விளாசினார்.

இதுகுறித்து இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி கூறியதாவது, “2 விக்கெட் இழப்புடன் இருந்தநிலையில் முதல் இன்னிங்சில் ரகானே 6 மணிநேரம் கடுமையாக பேட்டிங் செய்தார். மெல்போர்னில் இருந்த மேகமூட்டம் நிறைந்த சீதோஷ்ண நிலையில் அவர் விளையாடிய விதம் வியக்கத்தக்கது.

அவர் சதம் விளாசி 112 ரன்கள் எடுத்ததுதான் இந்த டெஸ்ட் போட்டியில் திருப்பு முனையான விஷயமாகும். ரகானேவின் பொறுமையாக செயல்படும் திறனும் அணிக்கு வலு சேர்த்தது” என்று கூறியுள்ளார்

Related posts

இனி எங்க லெவல வேற.. இது சேம்பிள்தான்… இனி போக போக பாக்க போறீங்க!!

TamilSportsNews

உலக கிரிக்கெட்டின் சூப்பர் ஸ்டார் கோலிதான்… வி.வி.எஸ். லட்சுமண் புகழாரம்!!

TamilSportsNews

ஆட்டம்னா இதுதான் ஆட்டம்… செமயா ஆடுனாங்க பாகிஸ்தான் பெண்கள் அணி!!

TamilSportsNews

Leave a Comment