கருப்பு இன மக்களுக்கு எதிராக அநீதியான சம்பவங்கள் ஜனநாயக ஆட்சியில் நடைபெற்று வருகின்றது. இனவெறி பிடித்தவர்கள் மற்ற மக்களையும் மனிதர்களாகப் பார்க்க வேண்டும் என்ற வேண்டுகோள் தொடர்ந்து வைக்கப்பட்டு வருகின்றது.
அந்த வகையில் தற்போது இன்வெறி குறித்து இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் நடுவர் ஜான் ஹோல்டர் குற்றம் சாட்டியுள்ளார்.

ஜான் ஹோல்டர் கூறுகையில், “1992 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தினைப் பொறுத்தவரையில் முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் கருப்பினத்தவர்கள் யாரும் நடுவராக நியமிக்கப்பட்டவில்லை, தொடர்ந்து வெள்ளையினத்தவர்களே நியமிக்கப்பட்டு வருகின்றனர்.
நானும் பலமுறை நடுவர் பதவிக்கு இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவிப்பினை வெளியிட்ட பின்னர் விண்ணப்பித்து இருக்கிறேன், ஆனால் அவர்கள் எனக்கு முறையான பதில் அளிக்கவில்லை.
இனவெறி என்பது கிரிக்கெட்டில் இருக்கிறது என்பது மறுக்கமுடியாத உண்மை. கிரிக்கெட்டில் பெரிய அளவில் அனுபவம் இல்லாத வீரர்களுக்கு நடுவர்களாகும் வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், நான் ஹேம்ப்ஷயர் அணிக்காக முதல் தர போட்டிகளை விளையாடியது மட்டுல்லாமல் நடுவராகவும் பணியாற்றியுள்ளேன்” என்று ஜான் ஹோல்டர் கூறியுள்ளார்.