Cricket

மனைவிக்கு பேட்மிண்டன் கற்றுத் தரும் கிரிக்கெட் வீரர் புஜாரா!! லைக்குகளைக் குவித்த ரசிகர்கள்..

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த மாதம் இந்தியா- தென் ஆப்ரிக்கா இடையிலான கிரிக்கெட் போட்டிகள் ரத்து செய்யப்பட்டன. அடுத்து மார்ச் மாதம் நடைபெறவிருந்த ஐபிஎல் போட்டிகள் ஒத்தி வைக்கப்பட்டன.

அதனை அடுத்து ஆஸ்திரேலியாவில் நடைபெறவிருந்த டி 20 உலகக்கோப்பையும் இந்த வருட இறுதிக்கு மாற்றப்பட்டுள்ளதால், விளையாட்டு வீரர்கள், பிசிசிஐ ஊழியர்கள், பயிற்சியாளர்கள் என அனைவரும் ஓய்வில் இருந்து வருகின்றனர்.

மனைவிக்கு பேட்மிண்டன் கற்றுத் தரும் கிரிக்கெட் வீரர் புஜாரா!! லைக்குகளைக் குவித்த ரசிகர்கள்..

கொரோனா வைரஸ் தாக்கம் தீவிரமாகமல் இருக்க இந்தியாவில் மார்ச் 24 ஆம் தேதி துவங்கி ஏப்ரல் 14 ஆம் தேதிவரை ஊடரங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதனால் ஓய்வில் இருக்கும் வீரர்கள் விதவிதமாக பொழுதினைப் போக்கி வருகின்றனர், அந்த வகையில் புஜாரா அவரது மனைவிக்கு சமையலைறையில் உதவி செய்தல், டிவி பார்த்தல் என்று இருந்துவந்த நிலையில் ஒரு வாரகாலமாக மனைவியுடன் சேர்ந்து பேட்மிண்டன் விளையாடி வருகிறார்.

புஜாரா மனைவி பூஜாவிற்கு பேட்மிண்டன் விளையாடத் தெரியாது, இருப்பினும் புஜாரா பயிற்சி கொடுத்து அவருடன் சேர்ந்து விளையாடி வருகிறார். அந்தப் புகைப்படங்களை அவர் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

மேலும் அவர் கிரிக்கெட் வீரர் புஜாராவின் இந்தப் புகைப்படங்கள் வைரலானதுடன், பல லட்சக் கணக்கிலான லைக்குகளையும் பெற்றது.

Related posts

கண்ணு வெச்சுட்டேன்.. டி 20 உலகக்கோப்பை கப்பு நமக்குத்தான்… ஷர்துல் தாகூர் நம்பிக்கை!!

TamilSportsNews

தோனி ஓய்வு குறித்து மனம் திறந்த அவரது மானேஜர் மிஹிர் திவாகர்!!

TamilSportsNews

போட்டி கேன்சல்… எல்லாரும் கெளம்பி நாட்டுக்கு வாங்க.. இங்கிலாந்து கிரிக்கெட் போர்டு அறிவிப்பு!!

TamilSportsNews

Leave a Comment