Cricket

பப்ஜிதான் தோனிக்கு ஃபேவரைட்… சாக்ஷி தோனி பேட்டி!!

சிஎஸ்கே அணியின் இன்ஸ்டாகிராம் நேரலையில் தொகுப்பாளர் ரூபா ரமணியுடன் தோனியின் மனைவி சாக்‌ஷி உரையாடியுள்ளார், அப்போது கொரோனா லாக்டவுனில் குடும்பத்தோடு தோனி எவ்வாறு நேரத்தை செலவிட்டார் என்பது குறித்துப் பேசியுள்ளார்.

சாக்ஷி கூறியதாவது, ‘‘தோனியின் ஓய்வு மற்றும் ரீ எண்ட்ரி குறித்த விஷயங்கள் சமூக வலைதளங்களி ட்ரெண்டாவதை நான் எப்போதும் ஃபாலோ பண்ணிக் கொண்டிருக்கிறேன்.

சிஎஸ்கே அணிக்காக விளையாடுவார் என நினைத்த நிலையில், கொரொனா லாக்டவுனால் எங்களுடன் பண்ணைவீட்டில் நேரத்தை செலவிட்டு வருகிறார். ஷிவாவுடன் அவ்வப்போது விளையாடுவது, நடனம் ஆடுவது, பாடுவது என இருந்து வருகிறார்.

பப்ஜிதான் தோனிக்கு ஃபேவரைட்… சாக்ஷி தோனி பேட்டி!!

அதைத் தவிர்த்து பெரும்பாலான நேரங்களில் தோனியின் மன அழுத்தத்தை பெருமளவு குறைக்கச் செய்தவை வீடியோ கேம்கள்தான். அனைத்து வீடியோ கேம் விளையாடினாலும் பப்ஜிதான் அவருக்கு ஃபேவரைட்.  எங்களது படுக்கைகளை பெரும்பாலும் பப்ஜியே ஆக்கிரமித்து இருக்கும்.

அதைத் தவிர்த்து இருசக்கர வாகன உபகரணங்களை வாங்கி அவரே அதை வடிவமைக்கவும் கற்றுள்ளார். அதன்படி வாகனத்தின் ஏதாவது ஒரு பகுதியைப் பொருத்த மறந்துவிட்டால், அடுத்த நாள் மொத்த வாகனத்தையும் பிரித்து, மீண்டும் வடிவமைக்கிறார்’’ என்று கூறியுள்ளார்.

Related posts

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 5 டெஸ்ட் போட்டியில் விளையாட வாய்ப்பில்லை – கங்குலி பேட்டி!!

TamilSportsNews

இந்திய அணி ஒண்ணும் மோசமான அணி கெடயாது… ஜஸ்ட் ஒரு தோல்விதானே?… கோலி பேட்டி!!

TamilSportsNews

தீவிர பயிற்சியில் வீரர்கள்… நாளை துவங்குகிறது பாக்சிங் டே டெஸ்ட்!!

TamilSportsNews

Leave a Comment