Cricket

வீரர்கள் ஸ்மார்ட்வாட்ச் பயன்படுத்தக் கூடாது.. இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அதிரடி!!

கிரிக்கெட் வீரர்கள் தொடர்பான சூதாட்ட சர்ச்சைகள் அவ்வப்போது வெளியாகிய வண்ணமே உள்ளது, எவ்வளவு கெடுபிடிக்கு இடையிலும் உள்ளூர் கிரிக்கெட் முதல் சர்வதேச கிரிக்கெட் வரை அனைத்துப் போட்டிகளிலும் சூதாட்டம் தொடர்ந்த வண்ணமே உள்ளது.

சூதாட்டத்தினைக் குறைக்கும் பொருட்டு மாநில கிரிக்கெட் வாரியங்கள் முதல் சர்வதேச கிரிக்கெட் வாரியங்கள் வரை அனைத்து தரப்பிலும் ஊழல் கண்காணிப்புக்குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன.

வீரர்கள் ஸ்மார்ட்வாட்ச் பயன்படுத்தக் கூடாது.. இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அதிரடி!!

இவர்கள் சூதாட்ட தரகர்கள் மற்றும் வீரர்களை உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். அந்தவகையில், இங்கிலாந்தில் நடைபெற்று வரும் கவுன்ட்டி கிரிக்கெட் போட்டிகள் தற்போது டிவியில் மட்டுமே ஒளிபரப்பு ஆகின்றன.

இந்த போட்டிகளில் பங்கேற்கும் வீரர்கள் ஸ்மார்ட்வாட்ச்கள் பயன்படுத்துவதால் சூதாட்டத் தரகர்கள் வீரர்களை தொடர்பு கொள்வர் என இங்கிலாந்து கிரிக்கெட் போர்டு ஸ்மார்ட்வாட்ச்கள் பயன்படுத்த தடைவிதிக்க முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

மேலும் ஸ்மார்ட்வாட்சினை போட்டியில் கலந்து கொள்ள வந்தபின்னர் தங்கும் அறை, பால்கனி என எங்கும் பயன்படுத்தக் கூடாது என்றும் கூறப்படவுள்ளதாம். நிச்சயம் இதுபோன்ற முடிவுகள் மூலம் சூதாட்டம் போன்ற செயல்களை விடுத்து, கிரிக்கெட்மீது ரசிகர்களுக்கு எளிதில் நம்பிக்கையினை ஏற்படுத்தலாம் என்று கூறப்படுகிறது.

Related posts

வார்னரை ட்ரோல் செய்த மிட்செல் ஜான்சன்… பல்ப் கொடுத்த வார்னர்!!

TamilSportsNews

பகல் – இரவு ஆட்டம்…. இந்தூரில் தீவிர பயிற்சி செய்யும் வீரர்கள்!!

TamilSportsNews

இதுமட்டும் பத்தாது… இதுவும் வேணும்… இல்லனா நாம காலிதான்!!

TamilSportsNews

Leave a Comment