Cricket

பிங்க் பால் எல்லாம் ஒரு மேட்டரே இல்ல… சவாலுக்கு ரெடி.. விராட் கோலி ஆவேசம்!!

ஆஸ்திரேலியா அணி பிங்க் பால் டெஸ்டில் இந்தியாவுடன் விளையாட கடந்த முறை விருப்பம் தெரிவித்தது. ஆனால் இந்திய அணி அதற்கு சம்மதம் தெரிவிக்காததால் பிங்க் பால் போட்டி இவ்விரு அணிகளுக்கு இடையே நடைபெறவில்லை.

பலமுறை பிங்க் பால் போட்டிக்கு எதிராக இருந்துவந்த இந்திய அணி, வங்கதேச அணிக்கு எதிராக சமீபத்தில் விளையாடியது. முதல் முறையே பிங்க் பாலில் அசத்தலாக ஆடி வெற்றி பெற்றது.

ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீரர்கள், முன்னாள் வீரர்கள் பிங்க் பால் டெஸ்ட்க்கு இந்திய அணி சம்மதிக்காததை பெரிய அளவிலான விமர்சனமாக்கி உள்ளனர்.

தற்போது கேப்டன் கோலி  பிங்க் பால் டெஸ்டிற்கு தயார் என்று பேட்டி அளித்துள்ளார்.

பிங்க் பால் எல்லாம் ஒரு மேட்டரே இல்ல… சவாலுக்கு ரெடி.. விராட் கோலி ஆவேசம்!!

இதுகுறித்து கோலி கூறியதாவது, ‘‘முதல் முறையாக பகல்-இரவு டெஸ்டில் விளையாடிய போது எங்கள் அணியின் திறமையினை நிரூபித்துக் காட்டினோம்.

முதல் முறையே வெற்றிபெற்றது மகிழ்ச்சிக்குரிய விஷயமாகும். நாங்கள் பிங்க் பால் டெஸ்ட் குறித்து பயப்படவில்லை.

எங்கள் சொந்த மண்ணில் மட்டுமல்லாது உலகின் எந்தவொரு இடத்திலும் எந்த அணியையும் எதிர்கொள்ளும் தைரியமும் திறமையும் எங்களுக்கு உள்ளது. ஒயிட் பால், ரெட் பால், பிங்க் பால் என எதுவென்றாலும் விளையாடத் தயார்’’ என்று கூறியுள்ளார்.

Related posts

இரட்டை சதம் அடித்து சாதனை படைத்த ஷுப்மன் கில்

TamilSportsNews

பந்து கழுத்தை தாக்கியதால் உயிரிழந்த ஜஹாங்கிர் அகமது வார்

TamilSportsNews

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் வாய்ப்பு சந்தேகம்தான்- தீபக் சாஹர்

TamilSportsNews

Leave a Comment