Tennis

மக்கள் என்னைக் கூச்ச சுபாவம் கொண்டவள் என நினைப்பார்கள்.. கிராண்ட்ஸ்லாம் சாம்பியன் வருத்தம்!!

கொரோனா தொற்றின் தீவிரம் காரணமாக உலகின் பலநாடுகளில் ஊரடங்கானது அமலில் உள்ளது. தற்போதைக்கு தொற்றினைக் கட்டுக்குள் வைக்க சிறப்பான வழி, ஊரடங்கினைக் கடைபிடிப்பதுதான். இதனைக் கருத்தில் கொண்டு உலகின் பல நாடுகளிலும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதனால் உலகம் முழுவதும் முக்கிய நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள் எதுவும் நடைபெறவில்லை, அந்தவகையில் பாரீஸ் நகரில் மே 24 ஆம் தேதி தொடங்க இருந்த பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி செப்டம்பர் மாதம் நடைபெறும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தற்போது வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் வீட்டில் இருந்து உடற்பயிற்சிகளை செய்தும், ஓய்வு எடுத்தும் வருகின்றனர். அந்தவகையில் கிராண்ட்ஸ்லாம் சாம்பியன் நவோமி ஒசாகா சிஎன்என் செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்துள்ளார்.

மக்கள் என்னைக் கூச்ச சுபாவம் கொண்டவள் என நினைப்பார்கள்.. கிராண்ட்ஸ்லாம் சாம்பியன் வருத்தம்!!

அவர் கூறும்போது, “நான் மிகவும் கூச்ச சுபாவம் கொண்டவள் என மக்கள் நினைப்பார்கள், நான் நிறைய விஷயங்கள் குறித்து யோசிக்க நினைக்கிறேன். உண்மையில் ஊரடங்கினால் எனக்குக் கிடைத்துள்ள இந்த நேரத்தில் நான் என் வாழ்க்கையில் உள்ள சில மோசமானவைகளை சரிசெய்யப் பயன்படுத்துவேன்.

எனக்கு ஒவ்வொரு நாளும் தூங்குவதற்கு முன் யோசிக்க நிறைய வருத்தங்கள் உள்ளன. அவற்றில் இருந்து மீள்வது மிகவும் முக்கியமானதாகப் பார்க்கிறேன்” என்று கூறியுள்ளார்.

Related posts

மேடையில் கண்ணீர்.. ஓய்வினை அறிவித்த வோஸ்னியாக்கி

TamilSportsNews

டென்னிஸ் நட்சத்திரமான போர்னா கோரிக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி!!

TamilSportsNews

ஆண்கள் மற்றும் மகளிர் டென்னிஸ் சங்கங்கள் ஒன்றிணைய வேண்டும்… ரோஜர் ஃபெடரர் சொல்லும் ஐடியா!!

TamilSportsNews

Leave a Comment